ஆளுநருடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

Share

தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரவிருக்கும் நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த சில நாட்களாகவே சுறுசுறுப்பாக இருந்து வருகிறார்

குறிப்பாக மக்கள் பிரச்சனைகள் மற்றும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை, நீட் தேர்வு உள்ளிட்ட பல விஷயங்களில் அவருடைய குரல் வலிமையாக ஒலித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களை திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது அவர் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆலோசனை செய்ததாக தெரிகிறது.

தமிழக ஆளுநரை முகஸ்டாலின் சந்தித்து 7 பேர் விடுதலை குறித்து வலியுறுத்தியதை அடுத்து பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை செய்யப்படுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave A Reply