புதிய சட்டமன்றக் கட்டடத்தில் இருந்து மருத்துவமனையை மாற்றியே தீரவேண்டும்! – LR JAGADHEESAN

Share

கலைஞரின் எதிரிகள் இதோ ஆரம்பித்துவிட்டார்கள் அவர்களின் கயவாளித்தனத்தை. கழுத்தறுப்பு வேலையை. கலைஞரின் பெயரை வரலாற்றில் இருந்து இருட்டடிப்பு செய்யும் எத்துவாளித்தனத்தை.

அற்புதமாய் வடிவமைத்து அழகாய் கட்டப்பட்ட தமிழ்நாட்டின் புதியதலைமைச்செயலகத்தை ஒரு அகங்காரி கொடுங்கோலி அப்பட்டமான அரசியல் அசூயையால் சிதைத்து சின்னாபின்னமாக்கினார். தன் அரசியல் எதிரி கட்டிய புதிய தலைமைச்செயலகத்தில் கால் வைக்கமாட்டேன் என்று சபதம் போட்டு சாதித்துக்காட்டினார் அந்த சேலைகட்டிய சர்வாதிகாரி. அதற்கு ஒத்து ஊதினர் ஊடக அயோக்கியர்கள்.

இதோ அதே அயோக்கியர்கள் மீண்டும் ஆரம்பித்துவிட்டார்கள் தங்களின் அடுத்துக்கெடுக்கும் அயோக்கியத்தனத்தை. தலைப்பே அயோக்கியத்தனமானது. தலைமைச்செயலகமாக மட்டுமே திட்டமிட்டு கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தை சட்டவிரோதமாக மக்களின் பணம் நூறுகோடியை கொட்டி மருத்துவமனையாக மாற்றியதை மறைத்து “by chance” என்கிற வார்த்தைகளால் பூசி மெழுகுவதில் ஆரம்பிக்கும் அயோக்கியத்தனம் செய்தி முழுக்க தொடர்கிறது. That was not by chance but was by hatred, jealousy, arrogance and impotency of an intellectual class.

புதிய தலைமைச்செயலகமாக மட்டுமே கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தை மீண்டும் புதிய தலைமைச்செயலகமாக மாற்றாதே என்கிற பிரச்சாரத்தை எவ்வளவு நேர்த்தியாக செய்கிறார்கள் பாருங்கள். இதில் புதிய திமுக அரசு இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதாக வந்திருக்கும் செய்தி உண்மையானால் (உண்மையாக இருக்காது என்பது நம்பிக்கை; இருக்கக்கூடாது என்பது எதிர்பார்ப்பு) அதைவிட அயோக்கியத்தனம் வேறொன்று இருக்க முடியாது. இதில் புதிதாக முடிவெடுக்க ஒன்றும் இல்லை. அது தமிழ்நாட்டின் புதிய தலைமைச்செயலகமாகவே திட்டமிட்டு கட்டப்பட்டது. புதிய தமிழக சட்டமன்றத்தோடு.

எனவே அது மீண்டும் புதிய தலைமைச்செயலகமாகவும் புதிய சட்டமன்றமாகவும் செயல்படுவதே சரி. இதில் புதிதாக ஆராயவோ முடிவெடுக்கவோ ஒன்றும் இல்லை. ஏனெனில் அது எதற்காக உருவாக்கப்பட்டதோ அதற்காக பயன்படுத்த புதிய முடிவு எடுக்கத்தேவையில்லை.

கோவிட் கொள்ளைநோய் கட்டுக்குள் வந்த மறுநொடி அதற்கான வேலைகளை ஆரம்பிப்பதே சரி. அதுவே கலைஞருக்கு செய்யக்கூடிய குறைந்தபட்ச கைம்மாறு. நன்றிக்கடன். வரலாற்றில் நடந்த வல்லுறவுக்கான சரிசெய்தல். அதில் ஏதேனும் தடுமாற்றம் எழுந்தால் அது விபரீதமாகவே முடியும். சாபமல்ல. முன்னெச்சரிக்கை. கலைஞருக்கான அண்ணாசமாதி இடத்தைப்போலவே புதிய தலைமைச்செயலகமும் முக்கியமானது. அதில் சமரசங்களுக்கே இடம் இல்லை. உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளிக்கு மக்கள் பணத்தில் நினைவிடம் அமைக்க அடிமைகளால் முடியும் என்றால் சிதைக்கப்பட்ட தலைமைசெயலகத்தை மீட்க மற்றவர்களாலும் முடியும். முடியவேண்டும். அதுவே ஆளுமை.

இதை மருத்துவமனையாகவே நீடிக்கச்செய்யவேண்டும் என்று குரல் கொடுத்திருக்கும் மருத்துவ ஹைகோர்ட்டார்கள் இந்த தலைமைச்செயலக கட்டிடத்தை தன்னுடைய தனிப்பட்ட பகையால் பூமாலையை பிய்த்துப்போட்ட குரங்காக ஜெயலலிதா குதறியபோது உங்கள் மேல்வாயும் கீழ்வாயும் என்ன செய்துகொண்டிருந்தன? அவருக்கு ஏன் நீங்கள் இதுபோல் யோசனைகளை கூறவில்லை?

இதில் ஒருவர் சமூகநீதி வேறு பேசுபவர். மருத்துவமெல்லாம் படித்த இந்த ஹைகோர்ட்டார்களுக்கு ஒரு பாமரத்தனமான எதிர்கேள்வி. இதே அளவுகோளின்கீழ் பாலியல் பலாத்காரம் செய்தவனுக்கே “நடந்ததென்னமோ நடந்துபோச்சி; அவன்கூடவே வாழ்ந்துடு. அது தான் சரியா வரும்” என்று பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொடுத்துவிடுவீர்களா? இதில் நீங்கள் பேசும் நியாயம் அப்படிப்பட்ட அயோக்கியத்தனமான வாதம் தானே? இதை சொல்ல உங்களுக்கு கூசவில்லை?

அடுத்து இந்த கட்டிடத்தைப்போலவே சென்னையில் இன்னொரு கட்டிடமும் இருக்கிறது. அதுவும் அரசுக்கு சொந்தமான கட்டிடம் தான். விவேகானந்தர் இல்லம். அதையும் ஏன் நாம் மருத்துவமனையாக மாற்றி மக்களுக்கு பயன்படுத்தக்கூடாது? இந்த ஊடகங்களும் இந்த மருத்துவ *****களும் அதற்கு குரல் கொடுப்பார்களா? மாட்டார்கள்.

ஏனெனில் இதுகளின் குடுமிகள் எதற்கு ஆடும் யாருக்கு எதிராக விடைக்கும் என்பது தெரிந்த கதைதானே. பச்சை அயோக்கியர்கள். அதுவும் ஜாதிய வன்மம் நிரம்பிய அயோக்கியர்கள் என்பதற்கு அந்த விவேகானந்தர் இல்லம் எப்படி அரசு கையில் இருந்து மடத்தின் கைக்கு போனது என்கிற சமகால வரலாறே சாட்சி.

Leave A Reply