சோறு போட்டு உதை வாங்கிய நீலச் சங்கிகள்!

Share

அம்பேட்கர் நீதிக்கட்சியின் அரசியல் தோல்வி ஏன் நிகழ்ந்தது என எண்ணிப்பர்ர்க்க வேண்டும் என்று சொன்னார். அவர் ஆய்வாளர்; காரணங்களைச் சொன்னார்; அதோடு நிறுத்திக் கொண்டார்.

அம்பேட்கர் ஆய்வு செய்து சொல்வதற்குப் பல காலம் முன்பே இதை எண்ணிப் பார்த்தார் பெரியார்; அதன் தோல்விக்கான காரணங்களைக் கண்டறிந்தார். களைகின்ற முயற்சியில் ஈடுபட்டார்.

சிலர் அதன் பின்னும் திருந்தவில்லை என்பதனால நீதிக்கட்சியை சுயமரியாதை இயக்கத்துடன் இணைத்து திராவிடர் கழகம் எனும் பெயர் மாற்றத்துடன் செயல் மாற்றத்தையும் நடைமுறைப்படுத்தினார்.

அந்த சேலம் மாநாட்டுத் தீர்மானங்கள் அண்ணாவால் முன்மொழியப்பட்டு ஏற்கப்பட்டு அண்ணா தீர்மானங்கள் என்றே வரலாற்றில் நிற்கின்றன.

இது பொறுக்காத பழைய பண்ணையார் மனோபாவம் கொண்ட சிலர் நீதிக்கட்சியின் பெயரால் தொடர்ந்து இயங்கினர். அண்ணலுக்கு விருந்தளித்து அவரிடம் இவர்களை ஆதரிக்கவும் பெரியாரைக் கண்டிக்கவும் கேட்டுக் கொண்டனர்.

அண்ணல் சொன்னார் அவர்களிடம்; பார்ப்பனரல்லாத மக்கள் வெல்ல வேண்டுமெனில் அவர்களிடையே ஒற்றுமை வேண்டும்; தந்தை பெரியார் சொல்வதைக் கேளுங்கள் எனச் சொல்லி அனுப்பி வைத்தார் அவர்களை. (சோறு போட்டு உதை வாங்கிய கதை).

பின்னர் பெரியாரையும் சந்தித்து தன் ஆதரவை திராவிடர் கழகத் தீர்மானங்களுக்குத் தந்ததோடு திராவிட நாட்டுப் பிரிவினை குறித்த அவரது முந்தைய கருத்தை மாற்றிக் கொண்டு அதற்கும் ஆதரவு தந்தார்.

இங்கே சில அரைவேக்காடுகளோ தலித்களைத் தனியாகத் திரட்டி அதிகாரத்தை அடைவோம் என உட்டோப்பியக் கூச்சலிட்டுக் கொண்டுள்ளனர்.

அம்பேத்கர் இன்றிருந்தால் இவர்களைப் பார்த்து விலாவில் இடித்து திராவிட இயக்கத்தோடு போய் நிற்கச் சொல்லி இருப்பார்.

அண்ணன் திருமா பல படிப்பினைகளுக்குப் பின் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்துள்ளார்.

ஏனையோரும் சீக்கிரம் பட்டுணர்ந்து அந்த இடத்துக்கு வருவார்கள் எனும் நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது.
நீலச் சங்கிகள் மட்டும் தங்கள் தாய்க்கழகமான இந்து மகா சபாவோடு இணைவார்கள்.

-மாறன்

Leave A Reply