தினமலரையும், தினத்தந்தியையும் திமுக தலைவர் புறக்கணிக்க வேண்டும்!

Share

தினமலம் இன்றைக்கு தனது வயிற்றெரிச்சலை தலைப்புச் செய்தியாக கொட்டித் தீர்த்துள்ளது…

திமுகவின் வெற்றிக் கொண்டாட்டத்தை தடுக்க கவர்னருக்கே ஆலோசனை கூறியிருக்கிறது…

கங்கையாற்றில் அம்மண அகோரிகள் கூடியபோது விமர்சிக்க கையாலாகாத தினமலத்துக்கு, திமுகவினரின் பிரமாண்டமான வெற்றிச் செய்தியை தாங்கமுடியவில்லை…

தினமலமாவது, நமது இனவிரோதி என்று விட்டுவிடலாம்…

ஆனால், தினத்தந்தி பேப்பரும், டி.வி.யும் பண்ணியிருக்கிற குசும்பு எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது…

தேர்தல் அறிவுப்பு சமயத்தில், மதுரையில் அழகிரி தனது ஆதரவாளர்களைச் சந்தித்த செய்தியை மிகவும் மிகைப்படுத்தி தினத்தந்தி செய்தி வெளியிட்டதை மறக்க முடியாது.

மு.க.ஸ்டாலின் இனி எப்போதும் முதல்வராக முடியாது என்று முதல் பக்கத்தில் மிகப்பெரிய செய்தியாக வெளியிட்டு தனது உள்ள அரிப்பை வெளிப்படுத்தியது…

இதோ, இப்போது, திமுக 133 இடங்களில் ஜெயிக்கும் என்றும், 33 இடங்களில் இழுபறி என்றும் செய்தி வெளியிட்டு தனதி அரிப்பை கடைசி நேரத்திலும் வெளிப்படுத்தி இருக்கிறது…

திமுக தொண்டர்கள் பெரும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். ஆனால், நாளை மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும், முதல் ஆளாக இவர்கள்தான் அறிவாலய வாசலிலோ, கனிமொழி வீட்டு வாசலிலோ பேட்டிக்காக காத்திருப்பார்கள்…

இவர்களுக்கெல்லாம் பேட்டியே கொடுக்க வேண்டியதில்லை என்று தளபதி முடிவெடுக்க வேண்டும்…

ஜெயலலிதா பேட்டி கொடுக்காத போது இவர்கள் என்ன புடுங்கினார்கள்? மோடி 7 ஆண்டுகளாக பத்திரிகைகளையும் ஊடகங்களையும் டிஷ்யூ பேப்பராக கருதி இழிவுபடுத்துவதை இவர்கள் ஏதேனும் செய்தியாக்கினார்களா?

இதைப்போல, நமது பத்திரிகைகள், நமது தொலைக்காட்சிகளுக்கு மட்டுமே தளபதி முன்னுரிமை அளிக்க வேண்டும்…

தொண்டர்களின் உணர்வுகளை தளபதி கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்…

Leave A Reply