ஆக்சிஜனில் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பிரிவினை அரசியல்!

Share

இனி சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை மிக தந்திரமாக மூன்று விதமாக பிரித்து தந்திருப்பதும், இதுவரை ஆர்எஸ்எஸ் மோடியின் இந்திய ஒன்றிய அரசு இதை பற்றி வாய் திறக்காமல் யோக நிலையில் நிற்பதும் காவிகளும்,கார்ப்பரேட்களும்… கொரொனாவும், மூச்சுதிணறலும் எப்படி பிரிக்கமுடியாதோ அதுபோன்ற பந்தபாச பிணைப்பு எங்களுடையது என வெளிப்படுத்தி இருக்கின்றனர்…

அது மட்டுமல்லாமல் சீரம் இனி தயாரிக்கும் தடுப்பூசி மருந்தில் 50%-த்தை மோடியின் இந்திய ஒன்றிய அரசுக்கும், மீதி 50%-த்தை ஒன்றியத்தின் பிற மாநிலங்களுக்கும் பிரித்து தருமாம். எவ்வளவு பெரிய பித்தலாட்டம் இது?

எழுதி வைத்துக்கொள்ளுங்கள், பாசிச பாஜக ஆளும் ஒன்றிய அரசு விலை குறைந்த சீரம் தனக்கு ஒதுக்கும் 50%-த்தை பாஜக ஆளும் மாநிலங்களுக்கும், வருங்காலத்தில் தங்களின் வழக்கமான பொய்பித்தலாட்டத்தின் வழியே தனது கட்சி ஆட்சியில் அமர வாய்ப்பிருக்கும் மாநிலங்களுக்கும் கொஞ்சம் கூச்சமோ மனசாட்சியோ இன்றி அள்ளி வழங்கும்,தங்கள் ஆட்சி அமைய வாய்ப்பில்லாத மாநில மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்றே நினைக்கும்.ஏனெனில் பாசிச பாஜகவின் முந்தைய அரசியல் வரலாறு அதைத்தான் காட்டுகிறது…

நேற்று தமிழ்நாட்டின் ஆக்சிஜன் 45 மெட்ரிக் டன்னை ஆளும் அடிமை அதிமுகவை மதிக்காமல் பிடுங்கி ஆந்திர மாநிலத்திற்கு கொடுத்தது அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது, ஆனால் ஆந்திராவில் அதற்கான வாய்ப்பு தங்களுக்கு இருக்கிறது என பாசிச பாஜக நம்புவதால் இந்த வல்லடி அரசியல் பொறுக்கித்தனத்தை நேற்று நடத்தி காட்டிவிட்டது. தமிழ்நாட்டை பழி வாங்கியது போலவும் ஆச்சு, காலூன்ற வாய்ப்பிருக்கும் ஆந்திரத்தை குளிர்வித்தது போலவும் ஆச்சு…

பிரிட்டிஷ்காரனின் பிரித்தாளும் சூழ்ச்சியின் நோக்கம் தாங்கள் பிடித்த ஒட்டுமொத்த இந்திய நிலப்பரப்பை ஆள்வதும்,அதனை கட்டுக்குள் வைத்து கொள்ளையடிப்பது மட்டுமே.

ஆனால் பாசிச பாஜக ஹிந்துத்துவ கும்பலுக்கு இந்த இரண்டு மட்டுமின்றி இந்த நிலப்பரப்பின் மக்களை காலம் முழுவதும் அடிமைப்படுத்தி ஆர்எஸ்எஸ்-ன் கொடூர கொள்கையான வைதீக சனாதனத்தின் கீழ் வைத்திருப்பதே மிகமுக்கிய கூடுதல் நோக்கம்,அதற்காக அது எந்த எல்லையையும்,கொடும் அரசியலையும் செய்ய தயங்காது பாசிச பார்ப்பனிய சனாதனம்…

#பழனிவேல் மாணிக்கம் #Palanivel Manickam

Leave A Reply