சோனியா காந்தி, ராகுலை இன்று சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

Share

தமிழக முதல்வரான பின் முதல் முறையாக டெல்லி சென்றுள்ள அவர் சோனியா, ராகுலை சந்திக்கிறார்.

நேற்று பிரதமர் மோடியை சந்தித்த ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில், 25 கோரிக்கைகளை தமிழக நலன்கருதி முன்வைத்தார் ஸ்டாலின்.

ஜிஎஸ்டி நிலுவைத் தொகை வழங்க வேண்டும், மேகதாது அணைத் திட்டத்துக்கு கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். மதுரை எய்ம்ஸ் பணியை தொடங்க க வேண்டும் , நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் ரத்து ,7 பேர் விடுதலை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தார்.

பிரதமருடனான சந்திப்பின்போது முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தியை இன்று சந்தித்து பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின். தமிழக முதல்வரான பின் முதல் முறையாக டெல்லி சென்றுள்ள அவர் சோனியா, ராகுலை சந்திக்கிறார்.

அதேபோல் டெல்லியில் உள்ள பழைய தமிழ்நாடு இல்லத்தை இன்று பார்வையிடுகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். கௌடியா பார்க் பகுதியில் உள்ள வைகை இல்லம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட உள்ளதால் பார்வையிடுகிறார்.

தமிழக அரசின் வழக்கறிஞர்களுக்கான அறை, எம்.பி.க்களுக்கான அறை, நூலகம் பழைய தமிழ்நாடு இல்லத்தில் தான் செயல்பட்டது.

Leave A Reply