ஒரு நூற்றாண்டு கால, திராவிடப் பேரியக்க வரலாற்றில் இந்த பிப்ரவரி 17 ஆம் நாள் ஒரு சிறப்பு வாய்ந்த நாள்..
ஆம், இதே நாளில் 1929 செங்கல்பட்டு யில் வரலாற்று சிறப்பு மிக்க சுயமரியாதை மாநாடு தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்றது..
சென்னை மாகாணத்தில் அன்றைய முதல் மந்திரி திரு.பா சுப்பராயன் அவர்கள் இந்த மாநாட்டை துவக்கி வைத்தார்.
எவ்வித போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்த காலக்கட்டத்திலே சுமார் 20,000 பேர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது..
சென்னையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, செங்கல்பட்டை அடைந்துள்ளார்கள்.
குறிப்பாக பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்ட மாநாடு.
இந்த மாநாட்டில் செலவுக்காக உண்டியல் வைக்கப்பட்டது. அதில் சேர்ந்த மொத்த தொகை 3000 ரூபாய்..
இந்த மாநாட்டில்தான் வரலாற்று சிறப்பு மிக்க 20 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் மிக குறிப்பாக பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்பது..
சுதந்திர இந்தியாவில் அமையப்பட்ட முதல் ஒன்றிய அரசின், அமைச்சராக பொறுப்பு வகித்த, இந்திய அரசின் சட்டங்களை இயற்றிய அண்ணல் அம்பேத்கர் அவர்களால் கூட..
பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்ற சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.
ஆனால், பல்வேறு வகையான சோதனைகளுக்கு உட்பட்ட திமுக. 60 ஆண்டு காலத்திற்கு பிறகும். தந்தை பெரியார் இயற்றிய அந்த தீர்மானத்தை.
3 வது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 1989 யில் தமிழ்நாட்டில் சட்டமாக்கியது.
தமிழ், தமிழ்நாடு, தமிழன் இவற்றின் வளர்ச்சி பற்றிய எழுத தொடங்கினால்..
அதில் திராவிட அரசியல் வரிக்கு, வரி இருக்கும்..
வாழ்க திராவிடம்.
வெல்க திமுக.
உள்ளாட்சியில் நல்லாட்சி அமைய வாக்களிப்பீர் உதயசூரியன் சின்னத்தில்.
#பஹ்ரைன் திமுக
#DMKNRIWing
#DMK_NRIwing_Bahrain