புதுவரவுகளுக்கு தங்கக்கிரீடம்… தியாகிகளுக்கு முள்கிரீடமா? திமுகவில் குமுறல்!

Share

திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் விளைந்த காட்டுக் குருவிகளாக பிற கட்சிகளில் இருந்து கொள்ளையடித்த பணமூட்டையுடன் திமுகவுக்கு படையெடுப்பார்கள். ஆட்சிக்கு வரும்வரை தனது வியர்வையையும், பணத்தையும் செலவழித்து ஆட்சிக்கு வரும்வரை தலைமையின் கட்டளைகளை தலையில் சுமந்து, தனது குடும்பத்தைப் பற்றியே கவலை இல்லாமல் உழைப்பவர்கள் பின்னுக்கு தள்ளப்படுவார்கள்.

ஒரு திமுக நிர்வாகி மீதான வழக்குகள் விபரம்

இவர் இன்ன கோஷ்டி என்று பாகுபாடு பார்ப்பதும் மாவட்ட அளவில், மாநில அளவில் உருவெடுக்கும். ஆனால், அந்தக் கோஷ்டிகளும் இணைந்தே திமுக என்பதையும், அந்தக் கோஷ்டிகள் அனைத்தும் தலைவர் தளபதிக்கு கட்டுப்பட்டே செயல்படுகின்றன என்பதையும் மறந்துவிடுவார்கள்.

கலைஞர் இருந்தவரை எல்லாக் கோஷ்டிகளையும் சமமாகவே நடத்துவார். பாதிக்கப்படுவோர் தங்கள் குறைகளை தலைவரிடம் சொல்ல முடிந்தது. ஆனால், இப்போது, திமுக முன்னணி நிர்வாகிகள் தலைவரையே சந்திக்க முடியவில்லை. பிறகெப்படி தங்கள் குறைகளை சொல்ல முடியும் என்று குமுறுகிறார்கள்.

கட்சியின் போராட்டங்களில் பங்கேற்று பல்வேறு வழக்குகளை சுமந்து, அதை இன்றுவரை பெருமையாக கருதும் திமுக நிர்வாகிகள் இப்போது மனம் நொந்து போயிருக்கிறார்கள்.

இதற்கு காரணம், தனது சொந்த ஊரிலேயே புதிதாக கட்சிக்குள் நுழைந்தவர்கள், கட்சிக்காக பல்லாண்டுகளாக தியாகம் செய்தவர்களை துச்சமாக மதிக்கும் நிலை இருப்பதுதான். இதெல்லாம் தளபதிக்கு தெரியுமா? தெரிந்தும் ஏன் நிவர்த்தி செய்யப்படவில்லை என்பதுதான் நல்ல கட்சிக்காரர்களின் கேள்வியாக இருக்கிறது.

இனியாவது, முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் திமுக நிர்வாகிகளின் மனக்குமுறலை நேரடியாக அறிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். தலைவருக்கும் நிர்வாகிகளுக்கும் இடைத்தரகர்களை உருவாக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டாம் என்பதே உண்மையான கட்சிக்காரர்களின் விருப்பம்.

Leave A Reply