திமுக அரசு ஏன் பொங்கலுக்கு பணம் தரவில்லை? – Muralidharan Pb

Share

போன வருடம் அதிமுக அரசை கொடுக்க சொன்னாரே எதிர்கட்சி தலைவராக இருந்த இப்போது முதல்வராக இருக்கும் ஸ்டாலின்? இப்ப பணம் பற்றிய பேச்சே இல்லை என முட்டாள்தனமாக கேள்வி எழுப்புகின்ற சங்கி, அதிமுக, செருப்பு உள்ளிட்ட அரை மண்டைகளுக்கு…

திமுக தலைவர் அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த போது முதல்வராக இருந்த பழனிச்சாமிக்கு வைத்து கோரிக்கையை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பாருங்க.

தொடர்ச்சியாக இரண்டு மாதங்களாக அதாவது 2020 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முழு ஊரடங்கு அமுல்படுத்தபட்ட போது, வாழ்வாதாரங்களை இழந்த அடித்தட்டு மக்களை மீட்டெடுக்க மாதம் தலா 2500 ரூபாய் என 5000 கொடுக்க முதல்வரை வலியுறுத்தினார் எதிர்கட்சித் தலைவர்.

ஆனால் பெயருக்கென ஒரு மாதம் 1000 ரூபாய் கொடுத்து ஒப்பேற்றியது பழனிச்சாமி அரசு. கேட்டால் கஜானா காலி என அனுபல்லவி பாடினார் பழனிச்சாமி.

கடந்த பொங்கல் சமயத்தில் 2500 ரூபாயை தேர்தல் நேரத்தில் வாக்குகளை மனதில் கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு கொடுத்து அரசியல் செய்தார். அப்போதைய முதல்வராக இருந்த பழனிச்சாமி. ஆனால் அப்போதே 2500 என்பதை 4000 என அறிவிக்குமாறு முதல்வருக்கு கோரிக்கை வைத்தார் எதிர்கட்சித் தலைவர். அதாவது மேற்சொன்ன 5000 ரூபாயில் 1000 கொடுக்கப்பட்டுவிட்டதால் மீதம் 4000 அளித்திட கேட்டுக் கொண்டார்.

அதற்கு இசைந்து கொடுக்காத அதிமுக அரசு கிடப்பில் போட்டுவிட்டது.

ஆனால் இதை தேர்தல் பரப்புரைக்கு சென்ற அப்போதைய எதிர்கட்சித் தலைவர், திமுக ஆட்சி வந்தவுடன் நாங்கள் அந்த விடுபட்ட பணத்தை கொடுப்போம் அதுவும் ஜூன் 3 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளில் கொடுப்போம் என் வாக்குறுதி அளித்தார்.

எடப்பாடி நடிப்பு தோல்வியுற்று, தேர்தலில் வெற்றி பெற்றார் முக ஸ்டாலின்.

கலைஞர் மகன் சொன்னதை செய்தார். இரண்டாயிரம் ரூபாய் பணத்தை ரொக்கமாக கொடுத்து ஏழைகளின் ஏக்கத்தை தீர்த்து வைத்தார்.

பொங்கலுக்கு பணம் கொடுக்கும் வழக்கம் எப்போதும் தமிழ்நாடு அரசிடய் இல்லை. ஆடை,அரிசி உள்ளிட்ட பொங்கல் பரிசாக தானியங்கள் கொடுப்பதும் கலைஞர் ஆட்சியில் ஆரம்பித்தது அதுவும் விலையின்றி கொடுக்கப்பட்டது. மீண்டும் அதையே இன்னும் சிறப்போடு தரவிருக்கிறார் தமிழ்நாடு முதல்வர்.

Leave A Reply