அத்திக்காய் பருப்பு கூட்டு செய்ய

Share

தேவையான பொருட்கள்: 

அத்திக்காய் – 1 கப், பயத்தம் பருப்பு – 1/4 கப்தக்காளி – 2முழு பூண்டு – 1வெங்காயம் – 2பச்சைமிளகாய் – 4உப்பு எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: அத்திக்காயை இடித்து விதைகளை நீக்கி கழுவி நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயம், ப.மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய்யை காயவைத்து நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும். 

அடுத்து அதில் இடித்த பூண்டு, நறுக்கிய பச்சைமிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும். பின்பு அதில் பயத்தம்பருப்பு, அத்திக்காய் சேர்த்து வதக்கி 1 டம்ளர் தண்ணீர்  சேர்த்து குக்கரை மூடி 2 விசில் வரும்வரை வேக விட்டு இறக்கவும்.

விசில் அடங்கியதும் அத்திக்காய் பொரியலை சாதத்துடன் பரிமாறவும். சூப்பரான அத்திக்காய்  பருப்பு கூட்டு தயார்.

Leave A Reply