நாட்டுக்கோழி குழம்பு

Share

தேவையான பொருட்கள்
நாட்டுக்கோழி கறி -1 கிலோ
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
கல் உப்பு -2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
சிறிய வெங்காயம் -1 கப் ( நறுக்கியது )
பச்சை மிளகாய் – 2 ( நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது- 2 தேக்கரண்டி
தக்காளி -2 (பொடியாக நறுக்கியது )
மிளகாய் தூள் – 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை
தண்ணீர்

மசாலா விழுது தயாரிக்க

மல்லி விதை – 2 மேசைக்கரண்டி
கச கசா – 1/2 மேசைக்கரண்டி
பட்டை – 1 துண்டு

ஏலக்காய் -3
கிராம்பு -5
மிளகு -1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 மேசைக்கரண்டி
தேங்காய் – 1 /2 கப் (துருவியது)
தண்ணீர்

செய்முறை

  1. முதலில் மசாலா விழுது அரைத்துக்கொள்ளவும்
  2. ஒரு கடாயில் மல்லி விதை, கச கசா, பட்டை ,ஏலக்காய் ,கிராம்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை நிறம் மாறும் வரை வறுத்து சிறிது நேரம் ஆற விடவும்
  3. இவற்றை ஒரு மிக்ஸியில் தண்ணீர் இல்லாமல் வரலாக அரைத்துக்கொள்ளவும்
  4. இதனுடன் துருவிய தேங்காய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்
  5. அடுத்து ஒரு பாத்திரத்தில் நாட்டுக்கோழி கறியை எடுத்துக்கொள்ளவும், சமைப்பதற்கு முன் கறியை மிதமான தீயில் சுட வேண்டும்
  6. கறியுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கல் உப்பு சேர்த்து நன்கு கலந்து இருபது நிமிடத்திற்கு ஊற வைக்கவும்
  7. அடுத்து ஒரு கடாயில் நல்லெண்ணெய், நறுக்கிய சிறிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்த பின்பு இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய தக்காளி, மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
  8. இந்த வதக்கியவற்றில் சிக்கன் துண்டுகளை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி முப்பது நிமிடத்திற்கு வேக வைக்கவும்
  9. சிக்கன் துண்டுகள் வெந்த பிறகு அரைத்த மசாலா விழுதை சேர்த்து பதினைந்து நிமிடத்திற்கு மூடிய நிலையில் சமைக்கவும்
  10. நாவின் சுவையை தூண்டும் நாட்டுக்கோழி கறி குழம்பு தயார்

Leave A Reply