புதுவித சுவை உள்ள சட்னி

Share

தோசை, இட்லிக்கு எப்போதும் தேங்காய் சட்னி , கார சட்னி என அரைப்பதுதான் வழக்கமா..? இன்னைக்கு இந்த தயிர் சட்னி செய்து அனைவரையும் அசத்துங்கள். புதுவித சுவையாக உள்ளதே என மிச்சம் வைக்காமல் ருசிப்பார்கள்.

தேவையான பொருட்கள் :

தயிர் – 1/2 கப் பெரிய வெங்காயம் – 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 tsp
எண்ணெய் – 1 tsp
கடுகு – 1 tsp
தனியா தூள் – 2 tsp
மிளகாய் தூள் – 1 tsp
கரம் மசாலா – 1/2 tsp
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :

ஒரு கிண்ணத்தில் தயிரை ஊற்றி அதில் தூள் வகைகளை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பின் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போடுங்கள். பொறிந்ததும் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்குங்கள். சற்று பொன்னிறமாக வந்ததும் கலந்து வைத்துள்ள தயிரை சேர்த்து கலந்துவிடுங்கள்

பின் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கிவிட்டு தட்டு போட்டு 10 நிமிடம் சிறு தீயில் கொதிக்கவிடுங்கள்.

10 நிமிடங்கள் கழித்து திறந்து பார்க்கும்போது தண்ணீர் வற்றி கெட்டியாக இருக்கும். அப்போது கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் தயிர் சட்னி தயார்..! இதை தோசை, இட்லி , ஏன்..சப்பாத்திக்குக் கூட தொட்டுக்கொள்ளலாம்.

Leave A Reply