செட்டிநாடு முட்டை குழம்பு

Share

தேவையான பொருட்கள்

நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மல்லி தூள் – 2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
முட்டை – 6
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை
பிரிஞ்சி இலை
ஏலக்காய்
கிராம்பு
பட்டை
உப்பு
தண்ணீர்

மசாலா விழுதுக்காக

எண்ணெய் – 1 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
கச கசா – 1/2 தேக்கரண்டி
பொட்டுக்கடலை – 1 தேக்கரண்டி (வறுத்தது )
சிவப்பு மிளகாய் – 8
தேங்காய் – 1/2 கப் ( துருவியது )
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 5 பற்கள்

செய்முறை

  1. ஒரு கடாயில் எண்ணெயை சூடேற்ற வேண்டும். பின்பு சோம்பு, கச கசா, பொட்டுக்கடலை, சிவப்பு மிளகாய், துருவிய தேங்காய், இஞ்சி மற்றும் பூண்டு ஆகிவற்றை முதலில் வதக்கவும்
  2. வதக்கியவற்றை சிறிது நேரம் ஆறவிட்டு மிக்ஸியில் தண்ணீர் ஊற்றி மை போல் அரைக்கவேண்டும்
  3. இப்போது மசாலா விழுது தயாராக உள்ளது
  4. அடுத்து ஒரு கடாயில் நல்லெண்ணெய், பிரிஞ்சி இலை, ஏலக்காய், பட்டை, கிராம்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை நிறம் மாறும் வரை வதக்கவும்
  5. வெங்காயம் பொன்னிறமானவுடன் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்
  6. இந்த கலவையில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், தேவைக்கேற்ப உப்பை சேர்த்து கலக்கவும் பின்பு அரைத்த மசாலா விழுது, தண்ணீர் சேர்த்து மூடிய நிலையில் பத்து நிமிடம் கொதிக்க விடவும்
  7. கொதித்த கலவையில் ஆறு முட்டைகளை உடைத்து ஊற்றி , குறைந்த தீயில் பதினைந்து நிமிடம் கொதிக்க விடவும்
  8. பதினைந்து நிமிடம் கழித்து இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறவும்
  9. செட்டிநாடு முட்டை குழம்பு தயார். இந்த முட்டை குழம்பை வேக வைத்த முட்டையிலும் செய்யலாம்

Leave A Reply