நெத்திலி கருவாடு தொக்கு

Share

30 நிமிடத்தில் விருந்து போன்ற சுவையில் நெத்திலி கருவாடு தொக்கு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் 

கருவாடு – 100 கிராம்

வெங்காயம் – 3

தக்காளி – 2

குழம்பு மிளகாய் தூள் – 3 ஸ்பூன்

எண்ணெய் – 3 tbsp

கடுகு – 1 tsp

பூண்டு – 8 பற்கள்

உப்பு – தே.அ

கருவேப்பிலை – சிறிதளவு

செய்முறை

கருவாடை சுத்தம் செய்து சுடு தண்ணீரில் அலசி எடுத்துக்கொள்ளுங்கள். கடாய் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு பொறிக்க விடுங்கள்.

பின் கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்குங்கள்.

தக்காளி குழைந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் மிளகாய் தூள் சேர்த்து பிரட்டுங்கள். பின் 1 கப் தண்ணீர் ஊற்றி போதுமான உப்பு சேர்த்து கொதிக்க விடுங்கள்.

5 நிமிடம் கொதித்ததும் கருவாடு சேர்த்து கொதிக்க விடுங்கள்.

`10 நிமிடங்கள் தண்ணீர் சுருங்கி கெட்டிப்பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கிவிடுங்கள்.

அவ்வளவுதான் சுவையான் நெத்திலி கருவாடு தொக்கு தயார்.

Leave A Reply