அரிசி குழாய் புட்டு

Share

தேவையானவை :

புழுங்கல் அரிசி – 300 கிராம்,
உப்பு – தேவையான அளவு,
தேங்காய்த் துருவல் – 200 கிராம்,
தண்ணீர் – தேவையான அளவு.

செய்முறை :

கழுவி சுத்தம் செய்த அரிசியை வெயிலில் உலர்த்தி காய வைத்து, மாவு அரைக்கும் மெஷினில் கொடுத்து அரைக்கவும். அரிசி மாவில் போதுமான உப்பு, தண்ணீர் சேர்த்து, உதிரியாகப் பிசைந்து கொள்ளவும். புட்டுக் குழாயில் முதலில் தேங்காய்ப் பூவைப் போட்டு அடுத்து ஒரு கை அளவு புட்டுமாவைச் சேர்த்து, குழாயின் மேல் பாகம் வரை நிரப்பவும். கலத்தில் போதுமானத் தண்ணீர் ஊற்றி, குழாயை அதில் பொருத்தி வேக வைக்கவும். புட்டுக்குழாயின் மூடியிலுள்ள துவாரத்தின் வழியாக ஆவி வந்ததும் குழாயை எடுத்து அடிப்பக்கத்திலிருந்து ஒரு குச்சியால் புட்டை வெளியே தள்ளவும்.

Leave A Reply