காலிஃப்ளவர் ஃப்ரை

Share

தேவையான பொருட்கள்

காலிஃப்ளவர் – 1,
உப்பு – தேவைக்கு,
மஞ்சள் – 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,
தனியா தூள் – 1/2 டீஸ்பூன்,
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்,
அரிசி மாவு – 2 டீஸ்பூன்,
இஞ்சி,
பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்,
மைதா – 1 டீஸ்பூன்,
கார்ன்ஃப்ளவர் மாவு – 1 டீஸ்பூன்,
கொத்தமல்லி – சிறிதளவு,
எண்ணெய் – தேவைக்கேற்ப.

செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் உப்பு, மஞ்சள் சேர்த்து கொதிக்க விடவும். பின் அதில் காலிஃப்ளவர் சேர்த்து ஐந்து நிமிடம் கழித்து வடிகட்டி ஆறவிடவும். பின் அதில் மிளகாய்த்தூள், தனியா தூள், கரம் மசாலா, அரிசி மாவு, இஞ்சி, பூண்டு பேஸ்ட், மைதா, கார்ன்ஃப்ளவர் மாவு, கொத்தமல்லி சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து வைத்துக்கொள்ளவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி பொரித்து எடுக்கவும். இப்பொழுது கமகமக்கும் காலிஃப்ளவர் ஃப்ரை ரெடி.குறிப்பு: எண்ணெயில் பொரிக்கும்போது ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் போடவும்.

Leave A Reply