பொட்டுக்கடலை உருண்டை

Share

தேவையான பொருட்கள்

பொட்டுக்கடலை – 1 கப்,
வெல்லம் – 1/2 கப்,
தண்ணீர் – 1/4 கப்,
நெய் – சிறிது (உருட்ட).

செய்முறை

பொட்டுக்கடலையை வெறும் வாணலியில் சிறிது நேரம் வறுத்துக் கொள்ளவும். வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கரைத்து வடிகட்டிக்கொள்ளவும். வடிகட்டிய வெல்லத்தை அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும். பாகை தண்ணீர் உள்ள கிண்ணத்தில் இரண்டு சொட்டு விடவும். அது உருட்ட வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும். இதனுடன் பொட்டுக்கடலை சேர்த்து கிளறி கையில் நெய் தடவிக்கொண்டு உருண்டைகளாக உருட்டவும். கடைசியில் சட்டியில் இருப்பது ஆறியவுடன் இறுகி விடும். இதை அடுப்பில் சிறிது நேரம் வைத்தால் இளகி விடும். பின் உருண்டைகளாக உருட்டலாம்.

Leave A Reply