தேவையான பொருட்கள்
தோசை மாவு தயாரிக்க
இட்லி அரிசி- 1/2 கப் புழுங்கல் அரிசி – 1/2 கப் உளுத்தம் பருப்பு – 1/4 கப் வெந்தயம் வ – 1/2 தேக்கரண்டி கடலை பருப்பு – 1/2 தேக்கரண்டி அவல் – 1/4 கப் தண்ணீர் கல் உப்பு – 1/2 தேக்கரண்டி கார சட்னி செய்ய எண்ணெய் – 2 தேக்கரண்டி கடலை பருப்பு – 2 மேசைக்கரண்டி சீரகம் – 1 தேக்கரண்டி வெங்காயம் – 1 பூண்டு – 6 பற்கள் காய்ந்த சிவப்பு மிளகாய் – 15 கல் உப்பு – 1/2 தேக்கரண்டி தண்ணீர்
உருளைக்கிழங்கு மசாலா செய்ய
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி கடுகு – 1/4 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு – 1/4 தேக்கரண்டி சீரகம் – 1/4 தேக்கரண்டி பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி கறிவேப்பிலை வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – 2 மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி உப்பு – 1 தேக்கரண்டி வேகவைத்த உருளைக்கிழங்கு – 3 கொத்துமல்லி தழை
செய்முறை:
1. மசாலா தோசைக்கு மாவு தயாரிக்க ஒரு கிண்ணத்தில் இட்லி அரிசி, புழுங்கல் அரிசி மற்றும் தண்ணீர் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.
2. அடுத்து ஒரு கிண்ணத்தில் உளுத்தம் பருப்பு, வெந்தயம் கடலை பருப்பு, தண்ணீர் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்
3. அடுத்து ஒரு கிண்ணத்தில் அவல் அதனுடன் தண்ணீர் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்
4. மூன்று மணி நேரம்கழித்து ஊறவைத்த அரிசி, ஊறவைத்த பருப்பு, ஊறவைத்த அவல் சேர்த்து மையாக அரைக்கவும்
5. அரைத்த மாவில் கல் உப்பு சேர்த்து எட்டு மணி நேரம் புளிக்கவைக்கவும்
6.அடுத்து காரசட்னி செய்ய ஒரு கடாயில் எண்ணெய், கடலை பருப்பு, சீரகம், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பூண்டு பற்கள், காய்ந்த சிவப்பு மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்
7. வெங்காயம் பொன்னிறமானவுடன் சிறிது நேரம் ஆறவிட்டு கல் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்
8. அடுத்து உருளைக்கிழங்கு மசாலா செய்ய ஒரு கடாயில் எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்
9. வெங்காயம் பொன்னிறமானுடன் அதனுடன் மஞ்சள் தூள், உப்பு, வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு மசிக்கவும்
10. இறுதியாக அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்
11. அடுத்து மசாலா தோசை செய்ய தோசைச்சட்டியில் மாவை ஊற்றி தோசை பாதி வெந்தவுடன் அதில் காரச்சட்டினியை முழுவதும் பரப்பி அதில் உருளைகிழங்கு மசாலாவை வைத்து அதை சுற்றியும் நெய் ஊற்றி சூடவும்
12. சூடான மற்றும் மொறுமொறுப்பான மசாலா தோசை தயார்