தேவையான பொருட்கள்
நல்லலெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் -2
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
உருளைகிழங்கு – 2
தேவையான அளவு உப்பு
கறிவேப்பிலை
அரிசி
மசாலா தூள் தயாரிக்க
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் -7
மல்லி விதை – 2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
புளி
செய்முறை
- முதலில் மசாலா தூள் தயாரிக்க வேண்டும்
- உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகு, சிவப்பு மிளகாய், மல்லி விதை, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை பொன்னிறமாகும் வரை வறுத்துவிட்டு சிறிது நேரம் ஆறவிட்டு அரைக்கவும்
- அடுத்து ஒரு கடாயில் நல்லெண்ணெய், கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சிவப்பு மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்
- இந்த வதக்கியவற்றில் உருளைக்கிழங்கு, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், சேர்த்து பொன்னிற்றமாகவும் வரை வறுக்கவும் பின்னர் அரைத்துவைத்துள்ள மசாலா தூளை சேர்த்து கலக்கவும்
- இந்தக்கலவையில் வேகவைத்த அரிசியை சேர்த்து கலக்கவும்
- சுவையான உருளைகிழங்கு சாதம் தயார்
- இந்த உருளைகிழங்கு சாதத்துடன் அப்பளம் அல்லது வத்தல் சேர்த்து பரிமாறவும்.