சீஸ்ஸீ வெஜ் சான்விச்

Share

காய்கறி கலவை செய்ய

பெரிய வெங்காயம் – 1 நறுக்கியது தக்காளி – 1 விதை நீக்கி நறுக்கியது பச்சை குடைமிளகாய் – 1 நறுக்கியது சிவப்பு குடைமிளகாய் – 1 நறுக்கியது உப்பு – 1/4 தேக்கரண்டி சாட் மசாலா – 1 தேக்கரண்டி புதினா சட்னி – 2 தேக்கரண்டி மயோனைஸ் – 1 கப் சில்லி ஃப்ளேக்ஸ் – 1 தேக்கரண்டி சான்விச் செய்ய பிரெட் – 3 துண்டுகள் காய்கறி கலவை வெண்ணெய் புதினா சட்னி சீஸ் சாஸ் செய்ய வெண்ணெய் – 1/2 தேக்கரண்டி பால் – 1/4 கப் ப்ரோஸஸ்ட்டு சீஸ் – 75 கிராம்

செய்முறை

1. காய்கறி கலவை செய்ய ஒரு பாத்திரத்தில் வெங்காயம், விதை நீக்கி நறுக்கிய தக்காளி, பச்சை குடைமிளகாய், உப்பு, சாட் மசாலா, புதினா சட்னி, மயோனைஸ் மற்றும் சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.

2. அடுத்து இரண்டு சான்விச் பிரெட் துண்டுகளை எடுத்துக் கொள்ளவும். இரு துண்டுகளின் மீதும் வெண்ணெய் தடவி, அடுத்து புதினா சட்னியை தடவவும்। ஓரங்களில் படும்படி நன்கு தடவிக் கொள்ளவும்.

3. ஒரு துண்டின் மீது செய்து காய்கறி கலவையை போட்டுக் கொள்ளவும் இரண்டாவது துண்டைக் கொண்டு காய்கறி கலவையை மூடவும்.

4. அடுத்து மூன்றாவது பிரெட் துண்டு எடுத்துக் கொள்ளவும்.

5. மூடிய பிரெட் துண்டு (இரண்டாவது துண்டு), மூன்றாவது பிரெட் துண்டின் மீது, மறுபடியும் வெண்ணெய் மற்றும் புதினா சட்னியை தடவிக் கொள்ளவும்.

6. மூடிய பிரெட் துண்டின் (இரண்டாவது துண்டு) மீது மற்றுமொருமுறை காய்கறி கலவையை போட்டுக் கொள்ளவும்.

7. மூன்றாவது பிரட் துண்டை கொண்டு இரண்டாவதாக போட்ட காய்கறி கலவையை மூடவும்.

8. அடுத்து ஒரு பேனில் வெண்ணெய் சேர்த்து செய்த சாண்ட்விச்சை இரு புறமும் நன்றாக டோஸ்ட் செய்யவும்.

9. அடுத்து சீஸ் சாஸ் செய்ய ஒரு பேனில் வெண்ணெய் சேர்த்து அதில் பால் மற்றும் துருவிய சீஸ் சேர்த்து மிதமான சூட்டில் சீஸ் உருகும் வரை கிளறிக் கொள்ளவும்.

10. செய்த சாண்ட்விச்சை துண்டுகளாக நறுக்கி அதன் மேல் செய்த சீஸ் சாஸ்ஸை ஊற்றி, சில்லி ஃப்ளேக்ஸ் மற்றும் பச்சை மிளகாய் துவி பரிமாறவும்.

Leave A Reply