எபோலோ வைரஸ் மீண்டும் பரவல் : தொடர் உயிரிழப்பால் காங்கோ மக்கள் அச்சம்

Share

2018ம் ஆண்டு உலகையே கதிகலங்க வைத்த எபோலோ வைரஸ், காங்கோவில் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில், ஏற்கனவே கொரோனா வைரஸால் 3000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அந்நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள பண்டகா நகரில் 4 பேர் எபோலோ வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனை அந்நாட்டு சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் எட்னி லாங்கோண்டோ, பாண்டகா நகரில் எபோலோ பரவல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அங்கு தேவையான தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் ஈக்வேட்டூர் ஏற்கனவே எபோலோ பாதிப்பை சந்தித்த மாகாணம் என்பதால் இங்கு நிலைமையை கையாள்வது சற்று எளிதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த 2018ம் ஆண்டு காங்கோவில் எபோலோ வைரஸால் 2,280 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply