நிலவில் மனிதன்: கென்னடி சபதம் (மே 25, 1961) – History of space exploration

Share

“1970ஆம் ஆண்டுக்குள் நிலவில் மனிதன் காலடி பதிக்க வேண்டும். இந்த லட்சியத்தில் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது. நிலவில் இறங்கிவிட்டு மனிதனை பத்திரமாக பூமிக்கு கொண்டு வரவேண்டும்”

அமெரிக்க அதிபர் கென்னடி இப்படி பேசினார்.

இது 1961ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி நடந்தது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் கென்னடி உணர்ச்சிகரமாக பேசினார். இந்த திட்டத்துக்காக 1700 கோடி டாலர்களை ஒதுக்கும்படி நாடாளுமன்றத்திடம் அவர் கோரிக்கை விடுத்தார்.

அடுத்த 5 ஆண்டுகளில் இந்த திட்டத்துக்காக 9 ஆயிரம் கோடி டாலர்கள் தேவைப்படும். இருந்தாலும் தொடக்கச் செலவுகளுக்காக இந்த தொகையை ஒதுக்குவதாக அவர் கூறினார்.

கென்னடியின் இந்த பேச்சு சோவியத் ரஷ்யாவை எதிரொலித்தது. ரஷ்ய அதிபர் குருஷேவை சந்திப்பதற்கு முன்பு நாடாளுமன்றத்தில் கென்னடி ஆற்றிய கடைசி உரை இது. சோவியத் யூனியனின் சாதனைகள் அவரை பொசுங்கச் செய்தன.

அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரர் பத்திரமாக பூமிக்குத் திரும்பியவுடன் அவருடைய ஆவல் அதிகரித்தது. கஷ்டங்களுக்கு இடையில் இந்த லட்சியத்தை அடைந்தே தீரவேண்டும் என்று அவர் பிடிவாதமாக இருந்தார்.

கென்னடியின் இந்த பிடிவாதம் தான் அமெரிக்க விண்வெளி வீரர்களை நிலவில் தடம் பதிக்கச் செய்தது.

1969ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் தேதி அப்பலோ-11 விண்கலம் நிலவில் இறங்கியது. நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் நடந்தார்.

20 நிமிடங்கள் கழித்து ஆல்ட்ரின் அவரை பின் தொடர்ந்தார். இந்த காட்சி உலகம் முழுவதும் தொலைக் காட்சியிலே ஒளிபரப்பாகியது.

அதே மாதம் 24ஆம் தேதி அப்பலோ-11 விண்கலம் குழுவினருடன் பத்திரமாக தரையிறங்கியது. நிலவுக்குச் சென்ற குழுவினர் 21 நாட்கள் ரகசியமாக பாதுகாக்கப்பட்டனர்.

Leave A Reply