24-5-2021 தினப்பலன்

Share

பிலவ வருடம் I வைகாசி 10 I திங்கட்கிழமை I மே 24, 2021

மேஷம்

பலன்கள் நிறைந்த நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலைத் தொழிலில் சாதகமான சூழல் இருக்காது. வேலையில் கூடுதல் பொறுப்புக்கள் வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சியான சூழல் இருக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும்.

ரிஷபம்

சுமாரான நாளாக இன்றைய தினம் இருக்கும். தன்னம்பிக்கை குறையும். எதிர்மறை எண்ணங்களைத் தவிர்ப்பது நல்லது. வேலை, தொழிலில் சாதகமான சூழல் இருக்காது. வேலையில் தவறுகளை செய்ய வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே உறவு பலப்படும். பணப் புழக்கம் ஓரளவுக்கு சாதகமாக இருக்கும்.

மிதுனம்

மிதமான பலன்கள் கொண்ட தினமாக இன்றைய நாள் இருக்கும். வேலை, தொழிலில் சுமுக சூழலைக் காண்பது கடினம். உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் குறையும். வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும்.

கடகம்

இனிமையான நாளாக இன்றைய தினம் இருக்கும். இன்றைய நாளில் முக்கிய முடிவுகள் எடுக்கலாம். வேலை, தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். கடினமான வேலையையும் எளிதாக முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். சிலருக்கு பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

சிம்மம்

இன்று ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை குறைந்து, பாதுகாப்பின்மை உணர்வு அதிகரிக்கும். வேலை வழக்கம் போல செல்லும். குடும்பத்தில் அமைதியை தக்க வைக்க சகஜமாகப் பேசுவது நல்லது. எந்த ஒரு விஷயத்தையும் லேசாக எடுத்துக்கொள்வது உறவு இனிமையாக இருக்க உதவும். நிதி நிலை சரியாக இல்லை. பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.

கன்னி

சுமாரான நாளாக இன்றைய தினம் இருக்கும். வெற்றி பெற கூடுதல் உழைப்பை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். வேலையில் பாதுகாப்பற்ற சூழலை உணர்வீர்கள். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் போக்கு ஏற்படலாம். நிதி நிலை சீராக இருக்கும். பண வரவுக்கான வாய்ப்பு உள்ளது.

துலாம்

நன்மையான நாளாக இருக்கும். வெற்றிகளைக் குவிப்பீர்கள். வேலையில் தடைகளை சந்திக்க நேரிடும். திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலம் பிரச்னையைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் அமைதி பாதிக்கப்படும் சூழல் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே பேசும் போது வார்த்தையில் கவனம் தேவை. பணப் புழக்கம் சாதகமாக இருக்கும். பண இழப்புக்கும் வாய்ப்புள்ளது.

விருச்சிகம்

வளர்ச்சிக்கான நாளாக இருக்கும். இறங்கும் காரியத்தில் வெற்றி பெறுவீர்கள்.  வேலைப் பளு அதிகரிக்கும். திட்டமிட்டுச் செயல்பட்டால் குறித்த நேரத்தில் வேலையை முடிக்கலாம். கணவன் மனைவி இடையே நட்புறவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும்.

தனுசு

சிறப்பான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை, புத்துணர்வு அதிகரிக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உற்சாகத்துடன் வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்க்கைத் துணைவருடன் நட்புறவான அணுகுமுறையை மேற்கொள்வீர்கள். இதனால் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

மகரம்

கவனக் குறைவு காரணமாக சில பாதிப்புகளைச் சந்திக்க நேரிடலாம். கடினமான உழைப்பை வெளிப்படுத்தும் நாளாக இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நல்லுறவு பாதிக்கப்படலாம். எந்த ஒரு விஷயத்தையும் பெரிதுபடுத்தாமல் சாதாரணமாக எடுத்துக்கொள்வது நல்லது. பணப் புழக்கம் சரியா இருக்காது. செலவு அதிகரிக்கும்.

கும்பம்

ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் குறைந்து காணப்படும். இன்றைய தினம் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வேலையில் தவறுகள் நிகழ வாய்ப்புள்ளது. கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் குழப்பமான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே மோதல், வாக்குவாதம் எழலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. வீண் செலவு ஏற்படலாம்.

மீனம்

வாய்ப்புகள் நிறைந்த, மகிழ்ச்சியான நாளாக இருக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும் . உடன் பணி புரிபவர்கள், உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே புரிதல் மற்றும் அன்னியோன்னியம் அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. நிதி நிலை மகிழ்ச்சியை அளிக்கும்.

Leave A Reply