27-5-2021 தினப்பலன்

Share

பிலவ வருடம் I வைகாசி 13 I வியாழக்கிழமை I மே 27, 2021

மேஷம்

சுமாரான நாளாக இருக்கும். மனதில் பயம், பதற்றம் அதிகரிக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். கூடுதல் பொறுப்புக்கள் உங்களுக்கு வழங்கப்படும். இதனால் வழக்கமான வேலைகள் பாதிக்கப்படும்.

மனதில் தான் என்ற எண்ணம் அதிகரிக்கும். இதனால், கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. வீண் செலவு ஏற்படும்.

ரிஷபம்

சாதகமான நாளாக இருக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். வேலையில் முழுத் திறமையையும் வெளிப்படுத்துவீர்கள். இதனால் உடன் பணி புரிபவர்கள், உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள்.

மனதில் காதல் உணர்வு அதிகரிக்கும். இதனால், கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

மிதுனம்

முன்னேற்றமான நாளாக இருக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். வேலையில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். வேலையைச் சுறுசுறுப்பாக முடிப்பீர்கள்.

குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். பணப்புழக்கம் சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

கடகம்

மந்தமான நாளாக இருக்கும். திட்டமிட்டு, சுறுசுறுப்புடன் செயல்பட்டால் இன்றைய நாளை சாதகமான நாளாக மாற்றம். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு இருக்காது.

குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே வீண் வாக்குவாதம் எழலாம். செலவு அதிகரிக்கும் என்பதால் கவனம் தேவை.

சிம்மம்

ஏற்ற இறக்கம் இல்லாத சமமான நாளாக இருக்கும். உங்களிடம் உள்ள குறைகளைக் கண்டறிந்து திருத்திக்கொள்வதன் மூலம் சாதகமான பலன்களைப் பெறலாம். வேலை, தொழிலில் சாதகமான சூழல் இருக்காது.

நிதானத்துடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம். சாதாரன விஷயத்தை எல்லாம் பெரிதுபடுத்தாமல் இருந்தால் குடும்பத்தில் அமைதி நிலவும். பண வரவுக்கு சிறிது வாய்ப்புள்ளது. செலவும் அதிகரிக்கும்.

கன்னி

முன்னேற்றமான நாளாக இருக்கும். வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். இன்றைய நாளை பயன்படுத்திக்கொள்வது நல்லது. வேலையில் சாதகமான சூழல் இருக்கும்.

உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். இருவருக்குமான புரிதல் அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

துலாம்

சோதனையான நாளாக இருக்கும். கவலைப்படாமல் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிட்டும். எந்த சோதனை வந்தாலும் தளர்ந்துவிடாமல் அமைதியாக இருப்பது நல்லது. வேலையில் சாதகமான சூழல் இருக்காது. உடன் பணி புரிபவர்களுடன் நல்லுறவைக் காக்க முயற்சிப்பது நல்லது.

குடும்பத்தில் மன வருத்தமான சூழல் இருக்கும். அணுகுமுறையில் மாற்றம் செய்வதன் மூலம் மகிழ்ச்சியைக் கொண்டு வரலாம். தேவைகள் அதிகரிக்கும். செலவும் அதிகரிக்கும்.

விருச்சிகம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். மனம் ஆன்மிக காரியங்களில் ஈடுபட விரும்பும். வேலையில் ஓரளவுக்கு சாதகமான சூழல் இருக்கும். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும்.

கணவன் மனைவி இடையே பிணைப்பு குறையலாம். நிதி நிலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். திட்டமிட்டு இன்றைய நாளில் செயல்படுவது நல்லது.

தனுசு

சுமாரான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். உங்களுக்கான வேலையை செய்ய முடியாமல் திணறும் சூழல் ஏற்படும்.

கணவன் மனைவி இடையே மோதல் போக்கு நிலவும். நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவு விஷயத்தில் கவனம் தேவை.

மகரம்

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். மனதில் உற்சாகம் கரைபுரண்டோம். வேலையில் சிறப்பாக பணியாற்றுவீர்கள். வெற்றிகள் உங்களைத் தேடி வரும்.

வாழ்க்கைத் துணைவருடன் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். இருவருக்குமான புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு உயரும்.

கும்பம்

சாதகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலையில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும்.

குடும்பத்தில் நட்புறவு நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

மீனம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். யதார்த்தத்தை உணர்ந்து செயல்படுவது நல்லது. வேலை, தொழிலில் சூழல் சற்று சாதகம் குறைந்து காணப்படும். வேலையில் தவறுகள் ஏற்படலாம்.

கணவன் மனைவி இடையே நல்லுறவு நிலவ நான் என்ற அகங்காரத்தை விட்டு பழகுவது நல்லது. நிதி நிலை சுமாராக இருக்கும். தேவையை சமாளிக்கக் கடன் வாங்கும் சூழல் வரலாம்.

Leave A Reply