ஆனி மாதம் தேய்பிறையில் வரும் அஷ்டமி விரதம் சிவனின் வடிவமான பைரவருக்கு உரிய தினமாகும்.
இதனுடன் தேய்பிறை அஷ்டமி வெள்ளிக்கிழமையில் வருவது மிகவும் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது.
இன்றைய தினத்தில் விரதம் இருந்து, சிறப்பான வழிபாடுகளை மேற்கொண்டு பைரவரின் அருளைப் பெறலாம்!

காலையில் குளித்து, வீட்டில் பைரவரை நினைத்து விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். மாலையில் பைரவர் சிலை இருக்கும் சிவாலயத்துக்குச் சென்று நைவேத்தியம் செய்து படைக்க வேண்டும்.
காலபைரவர் சன்னிதியில் சர்க்கரைப் பொங்கல், கேசரி உள்ளிட்ட ஐந்து வகையான இனிப்புகளைச் செய்து நைவேத்தியம் செய்து, ஐந்து தீபங்களை ஏற்றி பைரவருக்குரிய மந்திரங்களைச் சொல்லி வணங்க வேண்டும்.
பைரவருக்கான 108 போற்றியைச் சொல்லியும் வழிபாடு செய்யலாம். இன்றைய தினத்தில் பைரவரை வணங்குவது வீட்டில் உள்ள வறுமையை போக்கி ஐஷ்வர்யங்களை அளிக்கும். விரோதிகள், பகைவர்களின் தொல்லையை நீக்கி லாபத்தை தரும்.
பைரவர் காயத்ரி மந்திரம்:
“ஒம் ஷ்வானத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்.
ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே
ஸ்வாந வாஹாய தீமஹி
தந்நோ பைரவ ப்ரசோதயாத்.
ஓம் திகம்பராய வித்மஹே
தீர்கதிஷணாய தீமஹி
தந்நோ பைரவ ப்ரசோதயாத்.”