Browsing: ஆதனூர் சோழன் கவிதைகள்

முன் வினைப் பட்டதாரிகள் – ஆதனூர் சோழன் கவிதைகள்

பயப்படுவதற்கன்றி வேறுபலவற்றுக்காகவும் நாம் பிறந்தோம். நேயங்கொள்வதற்கேயன்றி வேறெதற்கும் இல்லையில் வாழ்க்கை. விருப்பப் படுவதற்கேயன்றி வெறுத்துப் புறமோடி வீணாகப் போக்க அல்ல. மோட்சத்தை யோசிப்பதற்கன்றி அதை சிருஷ்டிப்பதற்காகவும் நாம் பிறந்தோம். அச்சத்தைக் கொஞ்சுவதன்றி கச்சைகட்டி எழுந்து கைகுலுக்கிக் கொள்வோம். உணர்வுடன் நரகத்துழல்தலன்றி உயிருடன் சொர்க்கத்தை ஸ்பரிஸித்துக் கொள்வோம். முஷ்டியின் இறுக்கத்தில் முதல்விழுங்கிகளின் மூச்சினையடக்குவோம். முன்வினைப்பட்டதாரிகள் மூச்சுவிட நாம் காற்றுத் தருவோம். தோழனே, தோளினைக்குலுக்கி தாழ்களை உடைத்தால் முன்வினைப் பயன்மாறும் புரி! -ATHANURCHOZHAN

காதல்! – ஆதனூர் சோழன் கவிதைகள்

இதத்தென்றல் என் தேகம் தழுவும் போது நிதமுன் நினைவென் உள்ளெரிக்கும். வெம்மையை மென்மை தழுவும்போது மயிர்க்கால் அடியில் கூச்சறியும். இரவுக்குள் அமிழும்போது உறவுக்குனை துணையழைக்கும் உன்உருவைக் கனவில்கண்டு உள்ளம்சற்று உயிர்பிழைக்கும். விழிகளை இமைகள் தாழிடும்போதும் இதயம் ஏனோ திறந்தபடி மலர்க்கள மமைத்து உன்னுடன்நான் மகரந்தக் கவிதை சுரந்தபடி. உன் சிறுநோவிலும் என்னுளம் நோகும் புன்சிரிப்பொன்றில் பூரணமாகும் கறுப்புச்சந்தன தோலின்மீது வாசம் நுகரும் வாழ்க்கை போதும்! -Athanur chozhan

நாய்களின் பின்னோடும் புலிகள் – ஆதனூர் சோழன் கவிதைகள்

மருதநிலம் நிலைமறந்து பாலையிடம் கையேந்தும்சருகுகளின் அழகினிலே கொழுந்துகளும் மனம்மயங்கும்எரிமலையின் அடிவயிற்றைமின்மினிகள் கிள்ளிப்பார்க்கும்உரித்தொங்கும் வெண்ணெய்க்குபசுக்களிங்கே தவமிருக்கும்மிகைவீரம் குருதியிலே கொப்புளித்தும் – தாம்பிழைக்கபகையாளர் பாதங்களில் சிரம் தாழ்வோர், அவர்கள்… வான்கோழி நடம்ரசிக்கும் மயில்கள்கிளிஞ்சல்களின் ஒளிபுகழும் முத்துக்கள்நாய்களின் பின்னோடும் புலிகள்.

கானல்களின் கீர்த்தனங்கள்

காதல் நெஞ்சின் ஈரத்திலேகனவுகளின் கால்தடங்கள்பாலைவனப் பாதையிலேமேகங்களின் நிழற்படங்கள். பூவுக்கொரு பூமாலை பொன்வண்டு சூடாதோஇமைகளுக்கு வாழ்த்தொன்று கருவிழிகள் பாடாதோ! வாசமலர் தோட்டத்திலேமஞ்சள்வண்ண மாப்பொடிகள்நீலக்கடல் மீதினிலேபொங்கும் நுரைப் பூச்செடிகள் இரவுகளின் துணையாக நிலவு வந்து சேராதோபுல்நுனிக்கு மகுடமாக பனித்துளிகள் மாறாதோ! ஓடும்நதி தீரத்திலேநாணல்களின் நர்த்தனங்கள்கோடைவெய்யில் பருவத்திலேகானல்களின் கீர்த்தனங்கள் கோவிலிலே சிற்பமொன்று கொலுவிருக்க இணங்காதோவேர்களுக்கு மரக்கிளைகள் விழாவெடுத்து வணங்காதோ!

வாகைப்பூ

நான் எப்போதும் விழித்திருக்கிறேன். விழியுறங்கும் வேளையிலும்உணர்வுகள் விழித்திருக்ககனவுகளில் உலவுகிறேன். பகலைக் கடந்து இரவுக்குள்நான்நுழையும் சமயமெல்லாம்கொடிய அரக்க உள்ளங்கள்கொதிக்கின்ற உலையாகிஎன்னைக் கவ்வ எத்தனிக்கின்றன. எவரெஸ்டில் நிலவும்பனிக்காற்றின் தழுவலாகஎன்னைப் பிணைக்கும்அன்புப்பூ சொரிகின்ற ஆத்மாக்கள்துணையோடு நான்ஒவ்வொரு உலையையும் புறமொதுக்கிஇரவுக்குள் பிரவேசிக்கிறேன். விழியுறங்கும் வேளையிலும்உணர்வுகள் விழித்திருக்ககனவுகளில் உலவுகிறேன். நான் எப்போதும் விழித்திருப்பேன்.

அர்த்தம் – ஆதனூர் சோழன் கவிதைகள் 2

அர்த்தம் சாவின் விளிம்பில் சதுரங்கக் காய்களாய் மானுடமியக்கும் மந்திரம் எது? ஒருவழிப் பாதையில் உலகைச் செலுத்தி உள்ளவர்சிந்தனை பலவழிசிதற பாழ்செய்தது எது? விசையும் திசையும் வகைப்படுத்தி வீழ்ந்தெழுந்து வீரம்பேசி இசையும் கலையும் எண்ணிவிளைத்து இரசிக்கும் நெஞ்சில் சாந்தியடைத்தும், வெண்புறாவின் சின்னந்தரித்துப் பின் அசைப்பதென்ன சமாதானக்கொடி? காலப்போக்கில் புளியமரங்களில் புடலங்காய்கள் தொங்கக்கூடும். வேறோர் அச்சில் பூமியை நகர்த்தி பிரபஞ்சத்தின் புதுவிதி எழுதப்படும். அதற்குள்ளே ஏனிந்த நவீன ஆயுதங்கள்? பொறுமையும் முயற்சியும் புதுப்புதுக் கடவுளரை படைத்துக்கொண்டே இருக்கட்டும் பொழுது புலர…