Browsing: கல்கியின சிறுகதைகள்

கதை இலக்கியம் – 2 – நாற்காலி – கி.ராஜநாராயணன்

நாற்காலி இல்லாததும் ஒரு வீடா? எங்கள் வீட்டில் இப்படித் திடீரென்று எல்லோர்க்கும் தோன்றிவிட்டது. அவ்வளவுதான்; குடும்ப ‘அஜெண்டா’வில் வைக்கப்பட்டு இந்த விஷயத்தில் விவாதம் தொடங்கியது. முதல்நாள் எங்க வீட்டுக்கு ஒரு குடும்ப நண்பர் விஜயம் செய்தார். அவர் ஒரு சப்ஜட்ஜ், வந்தவர் நம்மைப் போல் வேட்டி சட்டை போட்டுக் கொண்டு வரப்படாதோ, சூட்டும் பூட்டுமாக வந்து சேர்ந்தார். எங்கள் வீட்டில் முக்காலிதான் உண்டு அதன் உயரமே முக்கால் அடிதான். எங்கள் பாட்டி தயிர் கடையும்போது அதிலேதான் உட்கார்ந்து…

கதை இலக்கியம் – 1 – இது மிஷின் யுகம்! – புதுமைப்பித்தன்

நான், அன்று ஒரு முழு நீளம் பெயர்கொண்ட-ஹோட்டல்காரர்£களுக்கும் நாடகக்காரர்களுக்குந்தான் வாயில் நுழையாத பெயர் வைக்க நன்றாகத் தெரியுமே- ஹோட்டலுக்குச் சென்றேன். உள்ளே எப்பொழுதும்போல் அமளி; கிளாஸ், ப்ளேட் மோதும் சப்தங்கள், அதைக் கொண்டுவா, இதைக்கொண்டுவா! என்ற அதிகாரங்கள்; இடையிலே உல்லாச சம்பாஷைனை; சிரிப்பு. போய் உட்கார்ந்தேன். “ஸார், என்ன வேண்டும்?” “என்ன இருக்கிறது?” என்று ஏதோ யோசனையில் கேட்டு விட்டேன். அவ்வளவுதான் கடல்மடை திறந்ததுபோல் பக்ஷணப் பெயர்கள் செவித் தொளைகளைத் தகர்த்தன. “சரி, சரி, ஒரு ப்ளேட்…

மகேந்திர ஜாலபுரம் – கல்கியின் சிறுகதைகள் – 9

மந்திரசித்தி பெற்ற மகான் ஒருவர் உங்கள் முன் வருகிறார். தமது மந்திரக்கோலை எடுத்து இரண்டு முறை சுழற்றுகிறார். உடனே நீங்கள் கால வெள்ளத்திலே பின்நோக்கி யாத்திரை செய்யத் தொடங்குகிறீர்கள், பின்னால், பின்னால், பின்னால் விரைந்து செல்கிறீர்கள். நூறு வருஷம், இருநூறு வருஷம், ஐந்நூறு வருஷம், ஆயிரம் வருஷங்கள் சென்றன. இன்னும் உங்கள் யாத்திரை நிற்கவில்லை. இருபதாம் நூற்றாண்டு, 1934 ஆம் வருஷம், பிரிட்டிஷ் சாம்ராஜ்யம், காங்கிரஸ் போராட்டம், சட்டசபைத் திட்டம், ஜில்லா போர்டுகள், முனிஸிபாலிடிகள், போலீஸ் ஸ்டேஷன்கள்,…