Browsing: கொரியா தமிழ் சங்கம்

கொரோனா காலத்திலும் கொரியாவை கலக்கிய தமிழர்!

உலக மக்களின் வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் புரட்டிப் போட்ட கொடூரமான வைரஸாக கொரோனா இருந்தாலும், இந்தக் காலகட்டத்தில் கிடைத்த தனிமையை பயன்படுத்தி தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தியவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் தென்கொரியாவில் ஆராய்ச்சி பேராசிரியராக பணிபுரியும் முனைவர் ஆரோக்கியராஜ் செல்வராஜை பற்றி சொல்லியே ஆகவேண்டும். கொரியா தமிழ்ச்சங்கம் வழியாக எனக்கு அறிமுகமானவர் நண்பர் ஆரோக்கியராஜ். தென்கொரியா தலைநகர் சியோலில் உள்ள ஸெஜோங் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். புதுச்சேரியைச் சேர்ந்த இவர், தென்கொரியாவைச் சேர்ந்த யூடியூபரான லஸோல் என்பவரின் உதவியோடு கொரியா தமிழ்…

செம்மொழி தமிழாய்வு நிறுவன இயக்குனருக்கு கொரியா தமிழ்ச்சங்கம் வாழ்த்து!

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு இயக்குனர் இல்லாமல் இருந்த நிலையில் உலகத்தமிழர்களோடு நெருங்கிய தொடர்பில் இருக்கும் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் அவர்கள் அப்பொறுப்பிற்கு பணியமர்த்தப்ப்பட்டிருப்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது என்று கொரியா தமிழ்ச்சங்கத் தலைவர் ராமசுந்தரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பது… “செப்புமொழி பதினெட்டுடையாள் எனினும் சிந்தனை ஒன்றுடையாள்” என்று உலகமே வியந்து பார்க்கும் அளவில் இந்திய திருநாட்டை நிலையாக கட்டிக்காக்கும் “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற தத்துவத்தை ஒற்றை வரியில் பாடினார் நம் மகாகவி பாரதி.…

விதிகளை மாற்றும்படி டிஎன்பிஎஸ்சி ஆசிரியர் தேர்வாணையத்துக்கு கொரியா தமிழ்ச்சங்கம் கோரிக்கை!

வெளிநாடுகளில் வேலை செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் பணி தேர்வைணையம் கேட்டுள்ள சான்றிதழ் விவரங்கள் தேவையற்ற கால விரையத்தை ஏற்படுத்துவதாக கொரியா தமிழ்ச்சங்கத் தலைவர் இராமசுந்தரம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக தலைமைக்கழக பேச்சாளர் ஆவடி குமார், திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், சிபிஐ தேசிய செயற்குழு உறுப்பினர் சி.மகேந்திரன், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ்,  பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குமரகுரு, மதிமுக பொதுக்குழு உறுப்பினர் காரை.செல்வராஜ் ஆகியோரிடம் அவர்…