Browsing: சகாய டர்சியூஸ் பீ

தனிமை அழகியல்! – சகாய டர்சியூஸ் பீ

அமாவாசையில் நிலவோடு நான்- அருகில் நீ! உன் மூச்சுக்காற்றின் வெப்பம் ஆசைத்தீயை மூட்ட ஒளிரும் உன் உதடுகள் உயிர்பருகி மெல்ல சிரிக்க! ஒட்டிக்கொண்ட நாணம் உயிர் வரை காதல் பாய்ச்ச! நீளாதா இந்த நொடி மனதோடு ஆசை பிறக்க! எட்டிப்பார்த்த விழிநீர் சொன்னது தனிமை அழகியல்..! – சகாய டர்சியூஸ் பீ #சகாயடர்சியூஸ்பீ #கவிதைகள்

வைகோ யார்? இணைய வழி கருத்தரங்கில் பேசுகிறார் கவிஞர் சகாய டர்சியூஸ்!

நாளை வெள்ளிக்கிழமை 16 ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு ஜி.ஆர்.பி ராஜ்சேகர், விக்னேஷ் ஆகியோர் ஏற்பாடு செய்துள்ள வைகோ யார்? என்ற இணைய வழி கருத்தரங்கம் நடைபெறுகிறது. மதிமுக சார்பில் நடைபெறவுள்ள இந்த கருத்தரங்கில், திராவிடம் ஒரு சொல் ஆய்வு என்ற தலைப்பில் தென்கொரிய தமிழ்ச்சங்க நிர்வாகிகளில் ஒருவரான கவிஞர் சகாய டர்சியூஸ் பீ கருத்துரை நிகழ்த்துகிறார். இந்த நிகழ்ச்சியில் மதிமுக இலக்கிய அணி செயலாளர் காரை செல்வராஜும் பேசுகிறார்.

பெண் சென்மம் நாளும் பரிதவிக்க விட்டுச் சென்ற கள்வா!- சகாய டர்சியூஸ் பீ

இருண்டமேகச் சுழல்கள் உன் கூந்தல் என்றான் வெண் சங்கை மிஞ்சும் அழகு உன்கழுத்து என்றான் பொன்னொளி வீசும் பிறைநிலா உன் நெற்றி என்றான் வானவில்லும் ஏங்கும் வடிவம் உன் புருவம் என்றான் கண்பறிக்கும் கயல் மீன்கள் உன் விழிகள் என்றான். சிவந்திருக்கும் முல்லை அரும்பு இதழ்கள் என்றான் ஒளிவீசும் முழுமதி நாணும் மின்னிழை வஞ்சி என்றான் பிடிக்குள் அடங்கும் உடுக்கை போல் இடை என்றான் சந்தனம் குழைந்து அமுதம் கலந்த அழகு மேனி என்றான் மெல்ல மெல்ல…