Browsing: சிகரெட் புகைக்கும் பெண்கள்

சிகரெட் புகைக்கும் பெண்ணுக்கொரு தோரணை உண்டு – அறிவழகன் கைவல்யம்

“ஈடன் கார்டன்” புறநகர் ரயில் நிலையம் மிக அழகானது, பிரிட்டிஷ் நினைவுகளை ஏந்தியபடி ஹூக்ளி நதிக்கரையில் பசுமையாகவும், அமைதியாகவும் இருக்கிறது. இணையாகப் பயணிக்கும் படகுகள், தொலைவில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிற ஹௌராவின் இரும்புப் பாலம் என்று எல்லாவற்றையும் பார்த்தபடி இருக்கிறது. ஹௌரா ரயில் நிலையத்தின் அருகிலிருக்கும் அரசு நடத்தும் படகுப் போக்குவரத்துக் கழக நிலையத்தில் இருந்து கொல்கத்தா மற்றும் பல ஊர்களுக்குப் படகில் பயணிக்கலாம், கட்டணம் மிகக் குறைவு, ஹௌராவில் இருந்து ஈடன் கார்டன் வந்து சேர…