Browsing: சினிமா செய்திகள்

டிக் டாக் புகழ் நடிகை இலக்கியா நடிக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படம்

டிக் டாக் புகழ் நடிகை இலக்கியா நடிக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படம் ‘நீ சுடத்தான் வந்தியா’.இப்படத்தை கே.துரைராஜ் இயக்கி இருக்கிறார் .ஆல்பின் மீடியா தயாரித்துள்ளது.இப்படத்தில் கவர்ச்சிநடிகை இலக்கியாவுக்கு ஜோடியாக புதுமுக நடிகர் அருண்குமார் நடித்துள்ளார். கவர்ச்சி நடிகையுடன் நடித்த அனுபவம் குறித்து நடிகர் அருண்குமார் பேசும்போது, ” சினிமாவைப் பார்க்கும் போது சுலபமாக தெரியும். நடிகர்கள் நடிப்பதெல்லாம் இலகுவாகத் தோன்றும் .ஆனால் நடித்துப் பார்த்தால்தான் நடிப்பு எவ்வளவு சிரமமானது என்று புரியும். நான் ‘நீ சுடத்தான் வந்தியா’…

ரஜினி மகளின் வேண்டுகோள்!

சத்யராஜ் நடித்த ‘6.2’, அர்ஜுன் நடித்த ‘வாத்தியார்’ உட்பட ஆறேழு ஹிட் படங்களைத் தயாரித்தவர் வி.பி.பிலிம்ஸ் கார்டன் பழனிவேல். அந்த பழனிவேல் இப்போது வி.சி.வடிவுடையான் டைரக்ஷனில் ஜீவன், மல்லிகா ஷெராவத், யாஷிகா ஆனந்த் காம்பினேஷனில் ‘பாம்பாட்டம்’ படத்தின் ஷூட்டிங்கை சென்னையிலும் மும்பையிலுமாக 50% ஷூட்டிங்கை முடித்துள்ளார். ‘பாம்பாட்டம்’ ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போதே புதுமுக ஹீரோவை வைத்து ‘ரஜினி’ என்ற படத்தின் ஷூட்டிங்கையும் ஆரம்பித்தார் பழனிவேல். ‘வாத்தியார்’ படத்தின் டைரக்டர் ஏ.வெங்கடேஸ் தான் 14 வருடங்களுக்குப் பிறகு…

விவேக் நினைவாக…..

சின்னக் கலைவாணர் விவேக் மறைந்து ஒரு வாரத்திற்கு மேலாக்விட்டது. திரைத்துறை சார்பில் அவருக்கு நினைவஞ்சலிக் கூட்டமும் நடந்தது. ஆனால் மரங்களை நடுவதில் அதி தீவிரமாக இருந்த விவேக் இதுவரை தமிழகம் முழுவதும் 33 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார். மரங்கள் நடுவதற்காகவே பசுமை கலாம் என்ற அமைப்பை உருவாக்கியிருந்த விவேக் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை லட்சியமாகக் கொண்டிருந்தார். அவரின் லட்சியத்தை நிறைவேற்றும் பணிகளில், விவேக்குடனேயே பதினைந்து வருடங்களுக்கும் மேலாக பயணித்த செல் முருகன் மற்றும் தயாரிப்பாளர்கள் லாரன்ஸ்,…

ரஜினி-கமல்-விஜய்-அஜீத் ஏரியா!

கோலிவுட் ஏரியாவில் கொரோனா பயம் விலகி, கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக சினிமா ஷூட்டிங்குகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் டைரக்ஷனில் விஜய்—பூஜா ஹெக்டே நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஜார்ஜியாவில் நடந்து வருகின்றன. போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் டைரக்ஷனில் அஜீத் நடிக்கும் ‘வலிமை’ படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக முடிந்துவிட்டது. ஒரே ஒரு ஃபைட் சீன் மட்டும் தான் ஷூட் செய்யப்பட வேண்டும். அதே போல் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா டைரக்ஷனில் ரஜினி—நயன்…

“நானும் அவசரப்படல”

“தெய்வமகள்’ சீரியல் மூலம் உச்சம் தொட்டவர் வாணி போஜன். ஊட்டி படுகர் இனத்தைச் சேர்ந்த இவருக்கு ஏர்ஹோஸ்டஸ் வேலை கிடைத்து, அதை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்தவர். குன்னூரில் இவரது குடும்பத்திற்குச் சொந்தமாக பல ஏக்கர் தேயிலைத் தோட்டம் இருக்காம். போனவருடம் கொரோனா லாக்டவுனுக்கு முன்பு ரிலீசான ‘ஓ மை கடவுளே’ செம ஹிட்டடித்ததில் சூப்பர் ஹேப்பியாக இருந்தார் வாணி போஜன். இப்போது தமிழ், தெலுங்கில் ஏழெட்டுப் படங்களை கையில் வைத்திருக்கும் வாணி போஜன், ‘ஓ..மை கடவுளே..’ படத்தைத்…

“எனக்கு கல்யாணமா?” – டென்ஷனாகும் நடிகை!

பொதுவாக எந்த மொழி சினிமா ஹீரோயினாக இருந்தாலும் சரி, அவர்களின் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போது, பத்திரிகைகயாளர்கள் யாராவது, “ஏங்க உங்களுக்கு எப்பங்க கல்யாணம்” எனக் கேட்டால் போதும் கடுகடுப்பாகிவிடுவார்கள். கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம் சினிமாவில் இன்னும் சாதிக்க வேண்டியிருக்கு” என்பார்கள். ஒரு சில ஹீரோயின்களோ இம்சை அரசர்களின் தேவையில்லாத அழைப்பை கட் பண்ணுவதற்காகவே பாய்ஃப்ரண்ட் ஒருவரை செட் பண்ணி வைத்துக் கொள்வார்கள். ( அந்த வரிசையில நயன் தாரா—விக்னேஷ் சிவனை சேர்த்துப்புடாதீக. அவுக லவ்வு…

சினிமா பிட்ஸ்….பிட்ஸ்….பிட்ஸ்……

இந்தியில் ஹிட்டடித்த ‘அந்தாதூன்’ படத்தினை ‘அந்தகான்’ என்ற பெயரில் தமிழில் ரிமேக் பண்ணுகிறார் மம்பட்டியான் தியாகராஜன். பிரசாந்த்—சிம்ரன், சமுத்திரக்கனி நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பில் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் ஹீரோ பிரசாந்த். ரேஸ் என்ற கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனத்தை வாங்கினார் சினிமா தயாரிப்பாளரான ஏஜிஎஸ் கல்பாத்தி அகோரம். விஜய் நடித்த ‘பிகில்’ படத்திற்குப் பின் இப்போது காமெடி நடிகர் சதீஷ் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தினை சில நாட்களுக்கு முன்பு பூஜையுடன் ஆரம்பித்துள்ளது ஏஜிஎஸ். டிவியில்…

சினிமாவுக்கு இனிமா கொடுத்த மோடி?

ஆதம் பாவா ஆவேசமான அதே நாள்ல தான் ஒட்டு மொத்த இந்திய சினிமாவுக்கே இனிமா கொடுத்திருக்கார் நம்ம மாண்புமிகு பிரதமர் மோடி. அதாவது அந்தந்த மாநில சென்சார் போர்டு அதிகாரிகள், சில படங்களின் பெரும்பான்மையான காட்சிகளுக்கோ அல்லது ஒட்டு மொத்தப் படத்திற்கோ தடை விதித்தால் மும்பையில் இருக்கும் ரீவைசிங் கமிட்டிக்குச் சென்று சர்ட்டிபிகேட் வாங்கி படத்தை ரிலீஸ் செய்வார்கள். ஆனா இப்ப மேட்டர் என்னன்னா அந்த ரீவைசிங் கமிட்டியையே கலைத்துவிட்டது ஆப் கி மோடி சர்க்கார். இனிமேல்…