Browsing: சிரிப்பும் கண்ணீரும் -கல்கியின் சிறுகதைகள் – 7

சிரிப்பும் கண்ணீரும் -கல்கியின் சிறுகதைகள் – 7

வர வர எனக்கு ஜாதகங்களிலும் கிரகங்களிலும் நம்பிக்கை அதிகமாகிக் கொண்டு வருகிறது. மனுஷ்யனுடைய வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்கள் ஏற்றத்தாழ்வுகள், வெற்றி தோல்விகள் இவற்றுக்கெல்லாம், அவனுடைய புத்திக்கெட்டாத சில காரியங்கள் இருக்கத்தான் வேண்டுமென்று தோன்றுகிறது. இல்லாமற்போனால், ஐரோப்பாவிலே சில பைத்தியக்காரர்கள் ஒரு யுத்தத்தைக் கிளப்ப, அதன் பயனாக இங்கே சென்னைப் பட்டணத்தில் சொற்ப ஜீவனம் செய்து கொண்டிருந்த எனக்கு வேலை போவானேன்? ஐரோப்பாவின் யுத்தத்தின் பயனாக நம் நாட்டில் தேசபக்த வீரர்களான காங்கிரஸ் மந்திரிகளுக்கு வேலை போயிற்று;…