Browsing: சு.பொ.அகத்தியலிங்கம்

சடங்காக இல்லாமல்… சாணை பிடிக்கும் பட்டறையாக…! – சு.பொ.அகத்தியலிங்கம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி [மார்க்சிஸ்ட்] தமிழ்நாடு மாநில 23 வது மாநாடு மார்ச் 30 அன்று செம்படை அணிவகுப்போடு மதுரையில் தொடங்குகிறது. என் நினைவுகள் பின்னோக்கி குமிழியிடுகின்றன. நான் கட்சிக்கு வந்தபின் சென்னையில் நடைபெற்ற 10 வது மாநில மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்றேன். அம்மாநாட்டிற்கான பிரச்சாரப் பணியிலும் ஈடுபட்டேன். வெண்மணி வில்லிசை நிகழ்ச்சி தயாரித்ததும் அப்போதுதான். இம்மாநாட்டுக்கு முன் சென்னை–செங்கை மாவட்ட 10வது மாநாடு காஞ்சிபுரத்தில் நடந்தது. அதிலும் பங்கேற்றேன். அன்றைய சென்னை என்பது இன்றைய வட…