Browsing: தந்தை பெரியார்

தந்தை பெரியார் அறிவுச்சுவடி – எழுத்தாளர் விந்தன் தயாரித்தது

எழுத்தாளர் விந்தன் தயாரித்த தந்தை பெரியார் அறிவுச்சுவடி பிடிஎப் வடிவில்… சுவாரசியமானது… சுருக்கமானது… குழந்தைகளுக்கும் புரியும் வகையில் அறிவூட்டுவது… periyararivuchchuvadi

தமிழ்நாட்டின் எல்லைச் சாமிகள் – ஆதனூர் சோழன்

இருள் கவியத் தொடங்கிய நேரம். அந்தக் கிராமத்தின் எல்லைக்குள் ஒருவன் மூட்டை முடிச்சுகளுடன் நுழைந்தான். அவனை ஒரு உருவம் வழிமறித்தது.. “யார் நீங்க? எந்த ஊர்? இங்கே எதுக்காக வர்றீங்க?” என்றது. “ஐயா, நான் பக்கத்து ஊருதானுங்க. அங்க இருக்கிற மனுஷங்க எல்லோரும் கெட்டவங்களா இருக்காங்க. வாழப் பொறுக்காதவங்களா இருக்காங்க” என்றான் அவன். அவனை அப்படியே திருப்பி அனுப்பியது அந்த உருவம். அடுத்தநாள், இதேபோல இன்னொருவன் அந்தக் கிராமத்து எல்லைக்குள் நுழைந்தான். அவனையும் அந்த உருவம் வழிமறித்தது……

திராவிட இயக்க வரலாறை ஏன் அடிக்கடி சொல்ல வேண்டும்? – Paneerselvan

நாம் நம் வரலாற்றைத் தொடர்ச்சியாக ஏன் பேசவேண்டும் என்றால், திரிபுகள் எப்பக்கம் இருந்தும் வரலாம் என்பதாலேதான். * தோழர் ஜீவானந்தம்-வாழ்வும் வரலாறும் – தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள்! * இன்றைக்கு பெரியாரை குற்றம் சொல்லுவதற்காக ஜீவானந்தத்தை உயர்த்தி பிடித்து கொண்டாடுவது,என்ற உத்தி தமிழ்நாட்டில் சிலரால் வேண்டுமென்றே முன்னிலைப் படுத்தப்படுகிறது. * அவருடைய ஏழ்மையான வாழ்வை குற்றம் சொல்லுவதோ அவருடைய தியாகத்தை மறுப்பதோ நம்முடைய நோக்கம் அல்ல. * அன்றைய இராமநாதபுரம் மாவட்டம் திருப்பத்தூர் தெம்மம் பட்டி…

அவமானங்களில் இருந்து தமிழகத்தை மீட்டெடுத்த மு.க.ஸ்டாலின்…

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று சொல்லிவிட்டு நிமிர்ந்து அரங்கத்தை பார்த்தார் ஸ்டாலின். அவருடைய பார்வை தொலைக்காட்சியில் பதவியேற்பை பார்த்துக் கொண்டிருந்த தமிழக மக்களையும் நோக்கியிருந்தது. அந்த தருணத்திற்காகவே காத்திருந்ததைப் போல கூடியிருந்தோரின் கரவொலி அதிர்ந்தது. பார்த்தவர் விழிகளில் பரவசமும், ஆனந்தக் கண்ணீரும் வழிந்தது. 10 ஆண்டுகள் பாழ்பட்டுக் கிடந்த தமிழகத்தை பண்படுத்த ஒருவன் வந்துவிட்டான் என்று தமிழர்கள் பரவசப்பட்டனர். கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த கூத்துகள் அனைத்தும் தமிழகத்தை உலக அரங்கில் மட்டுமல்ல, இந்திய…

சோறு போட்டு உதை வாங்கிய நீலச் சங்கிகள்!

அம்பேட்கர் நீதிக்கட்சியின் அரசியல் தோல்வி ஏன் நிகழ்ந்தது என எண்ணிப்பர்ர்க்க வேண்டும் என்று சொன்னார். அவர் ஆய்வாளர்; காரணங்களைச் சொன்னார்; அதோடு நிறுத்திக் கொண்டார். அம்பேட்கர் ஆய்வு செய்து சொல்வதற்குப் பல காலம் முன்பே இதை எண்ணிப் பார்த்தார் பெரியார்; அதன் தோல்விக்கான காரணங்களைக் கண்டறிந்தார். களைகின்ற முயற்சியில் ஈடுபட்டார். சிலர் அதன் பின்னும் திருந்தவில்லை என்பதனால நீதிக்கட்சியை சுயமரியாதை இயக்கத்துடன் இணைத்து திராவிடர் கழகம் எனும் பெயர் மாற்றத்துடன் செயல் மாற்றத்தையும் நடைமுறைப்படுத்தினார். அந்த சேலம்…

ஆனைமுத்து மறைவுக்கு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் அஞ்சலி!

பகுத்தறிவு தந்தை பெரியாரின் அடியொற்றி, சுயமரியாதைப் பாதையில், பெரியாரிய நெறியில் தனது இயக்கத்தை கட்டமைத்து ஆண்டுதோறும் சுயமரியாதை உள்ள இளைஞர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தி இளைஞர்களை பெரியாரிய நெறியோடு மார்க்சிய, அம்பேத்காரிய நெறிகளையும் போதித்தவர். பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளான கருவறை தீண்டாமையை ஒழிப்பதற்காக போராடி இறுதி வரை உறுதியாக நின்ற மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் அய்யா ஆனைமுத்து அவர்கள் தனது 96வது வயதில் பகுத்தறிவுப் பணியை நிறுத்திக் கொண்டுள்ளார். 1957ல் பெரியாரால் அறிவிக்கப்பட்ட அரசியல்…

2.நீதிக்கட்சி அரசின் சாதனைகளும் பூசல்களும்! – திராவிட இயக்க வரலாறு!

பார்ப்பனரல்லாதோர் மத்தியில் நீதிக்கட்சி பிரபலமானால் பார்ப்பனர்கள் எப்படி பார்த்துக் கொண்டிரு?கக முடியும்? நீதிக்கட்சியின் வளர்ச்சி மட்டும் பார்ப்பனர்களை பதற்றப்படுத்தவில்லை. மாண்டேகு செம்ஸ்போர்டு கமிஷன் அறிக்கையும் அவர்களை பாடாய் படுத்தியது. ஆம், இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்டு இந்தியர்களும் ஆட்சி நடத்தும் வகையில் டொமினியன் சர்க்கார் எனப்படும் இரட்டை ஆட்சிமுறையை அமல்படுத்த அந்த அறிக்கை வகை செய்தது. முதல் உலகப்போரில் பிரிட்டனுக்கு இந்திய ராணுவ வீரர்கள் ஒத்துழைப்பு அளித்தால் சுயாட்சி உரிமை குறிதது பரிசீலிக்கப்படும் என்று பிரிட்டன் வக்குறுதி…

1. நீதிக்கட்சியின் தோற்றமும் பார்ப்பனர் பதற்றமும்! – திராவிட இயக்க வரலாறு

1916 ஆம் ஆண்டு காங்கிரஸில் இருந்த திலகர், அன்னிபெசன்ட் இருவரும் பிரிட்டிஷ் ஆட்சிக்குள்ளேயே இந்தியர்களுக்கு தன்னாட்சி என்ற வாதத்தை முன்வைத்து ஹோம்ரூல் என்ற தன்னாட்சி இயக்கத்தைத் தொடங்கினார்கள். பிரிட்டனிலிருந்து இந்தியாவில் குடியேறி சென்னையில் ஆர்ய சமாஜத்தை நடத்தியவர் அன்னிபெசன்ட். தொடக்கத்தில் நாத்திகவாதியாக இருந்த அன்னிபெசன்ட் இந்தியர்களை ஏமாற்ற ஆரிய சமாஜத்தில் இணைந்தார். அவரும் வர்ணாசிரம் கோட்பாடுகளை ஏற்பவராக மாறினார். அதுபோல பாலகங்காதர திலகரும் வர்ணாசிரம கோட்பாடுகளை கடுமையாக பின்பற்றுபவர். இருவரும் இணைந்து இப்படி ஒரு இயக்கத்தை தோற்றுவித்ததால்…

ஈ.வெ. ராமசாமி நாய்க்கர் – TAMIL LEADERS – 3

ராமசாமி நாயக்கரா – அப்பா இம்மாதிரி சொல்லிப் பெருமூச்சு விட்டுக்கொண்டு வருகிறார்கள் தமிழர்கள். இந்த ‘‘மூச்சுப் பயிற்சி’’ சென்ற பல வருஷ காலமாக, விடாமல், தொடர்ந்து கொண்டேயிருக்கிறது, இந்தப் பெருமூச்சிலே ஆனந்தமும் ஆத்திரமும் கலந்து களிக்கின்றன. இத்தகைய முரண்கொண்ட உணர்ச்சி களைத் தமிழர்களின் உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரியச் செய்யும் ராமசாமி நாயக்கர் ஓர் அபூர்வமான பிறவியாகும். பிற்போக்காளர்கள் சபிக்கவும். தாராள நோக்குள்ளவர்கள் வாழ்த்தவும், ஆங்கில தேசத்தில் வாழ்ந்தும் வளர்ந்தும் வீழ்ந்தும், விடாமல் முண்டிக் கொண்டிருக்கிற மாஜி முதல்…