லெனினுடன் சில நாட்கள் 3 – மாக்ஸிம் கார்க்கி
ரோஸா லக்ஸம்பர்க் வாசாலகத் திறமையுடன் உணர்ச்சிகரமாகவும், கடுமையாகவும், குத்தலாகவும் பேசினாள். அப்புறம் லெனின் மேடை மீது ஏறினார்; கரகரப்பான குரலில், அடித் தொண்டையிலிருந்து “தோழர்களே!” என்று முழங்கினார். முதலில் அவருடைய பேச்சு மோசமாக இருப்பது போல எனக்குத் தோன்றிற்று. ஒரு நிமிஷம் கழித்ததும் நானும், ஒவ்வொருவரும் அவருடைய பேச்சில் பரிபூரணமாக ஈடுபட்டு விட்டோம். சிக்கலான அரசியல் பிரச்சினைகள் மிகவும் லகுவான முறையில் எடுத்துக் கூறப்படுவதை அப்பொழுதுதான் நான் முதன்முதலாகக் கண்டேன். சொல்லலங்காரத்துடன் பேசவேண்டுமென்ற பிரயாசை எதுவும் இல்லாமல்…