Browsing: திமுக

காவிரி பிரச்சனை – ஓர் உண்மை வரலாறு – 2 – ஆதனூர் சோழன்

1977 எம்ஜியார் ஆட்சி முதல் 2018 இறுதித் தீர்ப்பு வரை… 1977 மார்ச் மாதம் நெருக்கடி நிலை வாபஸ் பெறப்பட்டது. அதன்பிறகு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோற்றது. ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. ஆறுமாதங்கள் கழித்து நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றது. முதல்வராக பொறுப்பேற்ற எம்ஜியார் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்போது கர்நாடகாவிடம் பேசி தண்ணீரைப் பெறும் போக்கு நீடித்தது. காவிரியில் தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்படும்போது திமுகமீது பழிபோடும் வழக்கத்தை அவர்தான்…

சீமான் மாதிரி முட்டாளை திருமா ஆதரிக்கலாமா?

திமுக மீதோ, கலைஞர் குடும்பத்தினர் மீதோ கேவலமான தாக்குதலை யார் தொடுத்தாலும் கருத்துச் சொல்லாதவர்கள், நாற்றமெடுத்த பொய்கோலிகளுக்கு சப்போர்ட் செய்வது ஏன்? https://youtu.be/1r-KDz1jpFA

முதல்வர் ஸ்டாலினின் படையணி – Athanurchozhan

திராவிட இயக்கத்தின் லட்சியத்தை ஏந்தி முன்செல்லும் தளபதியாக மு.க.ஸ்டாலின் உருவெடுத்துள்ளார். அவருக்கு பக்கபலமாக, கவிஞர் கனிமொழி எம்.பி., ஆ.ராசா எம்.பி., திருச்சி சிவா எம்.பி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எஸ்.எஸ்.சிவசங்கர், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ஐ.பெரியசமி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் எதிரிகளை லாவகமாக கையாள்கிறார்கள். இயக்கத்தின் லட்சியங்களை எள்முனையளவும் விட்டுக்கொடுக்காமல், பதிலடி கொடுக்கிறார்கள். தமிழ்நாட்டின் உரிமைகள், மொழி உரிமை போன்றவற்றிலும், தமிழர்களின் பண்பாடு, வரலாறு ஆகியவற்றை நன்றாக அறிந்தவர்களாக அவர்களுடைய பதிலடி அமைந்திருக்கிறது. கல்வி, வேலைவாய்ப்பு, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின்…

“முடிந்தால் தமிழக சட்டமன்றத்தை ” முடக்கிப் பாருங்கள்” – எடப்பாடிக்கு உதயநிதி சவால்!

மதுரை மாநகராட்சி, மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், பாலமேடு, வாடிப்பட்டி, சோழவந்தான் உள்ளிட்ட பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், வெற்று வாக்குறுதி கொடுத்து காணாமல் போன அடிமைகளுக்கு பாடம் புகட்டிட வேண்டும்மென்றும், மகளிருக்கான உரிமைத் தொகை மாதம் ரூ.1000 விரைவில் வழங்கப்படும் என்றும், மேலும் தென்மாவட்ட மாணவர்களின் கல்விக்கு பேருதவியாக மதுரையில்…

திமுகவுக்காக நாம்தான் பேசனும்! – மு.ரா.விவேக்

பேரருளாளன் கலைஞர் வாழ்ந்த காலத்தில் கூட எவ்வளவோ பேர் அவர் மீது தனிப்பட்ட முறையில் பல கடுஞ்சொற்களை வீசியிருக்கிறார்கள், பெரும்பாலும் அவரின் உயரத்தில் காழ்ப்பு கொண்டவர்களாக இருந்திருப்பார்கள்! ஆம்! கலைஞரும் பத்திரிக்கையாளர் -இலக்கியம்- கலை- அரசியல்- வழக்காடுமன்றம் -பேச்சுமன்றம் எழுத்துக்கள் -படைப்புக்கள்- என்று எல்லாவற்றிலும் அவரின் ஆளுமையை செலுத்திக்கொண்டே இருந்தால்- மேற்படி தனி தனி துறை Specialist கள் எல்லோரும் நம்மால் முடியவில்லையே என்ற ஒரு கோபம் காழ்ப்பு அல்லது முடியாமை எல்லாம் சேர்ந்து கலைஞரை விமர்சிக்க…

அமைச்சர் பி.மூர்த்தியின் பெயரால் திமுக நிர்வாகியின் ‘அட்ராசிட்டிகள்’!

சொந்தக் கட்சிக்காரர்களையே அச்சுறுத்தி வாரிக் குவிக்கிறார் மாவட்ட திமுக அவைத்தலைவரான எம்ஆர்எம் பாலசுப்பிரமணியன் என்கிறார்கள். இவருடைய நடவடிக்கை மதுரை புறநகர் மாவட்ட திமுகவுக்குள் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. பலகட்சிகளில் இருந்துவிட்டு இப்போது திமுகவுக்கு வந்த இவரின் அட்டூழியம் அமைச்சர் பி.மூர்த்திக்கு தெரியுமா என்று இவர்கள் நொந்துபோய் கேட்கிறார்கள். ஏனென்றால், நான் சொல்வதைத்தான் அமைச்சர் கேட்பார் என்று எம்ஆர்எம் பாலசுப்ரமணியன் மார்தட்டுகிறாராம். காமராஜ் ஐஏஎஸ் அதிகாரியை ஒருநாள் தனது வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்த பிறகு, அவரையே…

அவமானங்களில் இருந்து தமிழகத்தை மீட்டெடுத்த மு.க.ஸ்டாலின்…

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று சொல்லிவிட்டு நிமிர்ந்து அரங்கத்தை பார்த்தார் ஸ்டாலின். அவருடைய பார்வை தொலைக்காட்சியில் பதவியேற்பை பார்த்துக் கொண்டிருந்த தமிழக மக்களையும் நோக்கியிருந்தது. அந்த தருணத்திற்காகவே காத்திருந்ததைப் போல கூடியிருந்தோரின் கரவொலி அதிர்ந்தது. பார்த்தவர் விழிகளில் பரவசமும், ஆனந்தக் கண்ணீரும் வழிந்தது. 10 ஆண்டுகள் பாழ்பட்டுக் கிடந்த தமிழகத்தை பண்படுத்த ஒருவன் வந்துவிட்டான் என்று தமிழர்கள் பரவசப்பட்டனர். கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த கூத்துகள் அனைத்தும் தமிழகத்தை உலக அரங்கில் மட்டுமல்ல, இந்திய…

எல்லாவற்றையும் கடந்து கட்சி நடத்துவது சும்மாவா?

இந்த உலகத்தில் அதிகமாக வசைபாடப்பட்ட ஒரு சமகால தலைவர் உண்டென்றால் அது தலைவர் கலைஞர்தான். தற்போது, தமிழ்நாட்டில் அதிகமாக நக்கல் அடிக்கப்பட்ட தலைவர் மு.க.ஸ்டாலின். உலகத்தில் உள்ள கட்சிகளில் அதிகமாய் திட்டு வாங்கிய கட்சி திமுகதான். பூரா பயலும் திட்டுவான், ஆரியம் போல் என்று பிராமணர்களை குறிக்கும் என்று அந்த வாக்கியங்களை தமிழ் தாய் வாழ்த்து இசைக்கும் போது எடுக்க ஆணையிட்ட போதிலும், பிராமணன் திட்டுவான். 30 பேரை மலையாள மகோரா மேனன் போலீசை விட்டு கொன்னாலும்,…

கலைஞர்னா துள்ளுறதும் ஜெயலலிதான்னா பம்முறதும்தான் வீரமா?

90-களின் பிற்பகுதில காஞ்சிபுரத்துல உள்ள தலித் மக்கள், அங்க பிற சாதி ஆட்களால் பயன்படுத்தபட்டு வந்த பஞ்சமி நிலங்களை மீட்கிறதுக்காக போராட்டம் நடத்துறாங்க. போராட்டத்தின் ஒரு பகுதியா நாலரை ஏக்கர் நிலத்தை மீட்டு, அங்க விவசாயம் செய்ய ஆரம்பிக்கிறாங்க தலித் மக்கள். ஆட்சியாளர்கள் உடனே, அந்த மக்களை அடிச்சு விரட்டுறாங்க. இதைக் கண்டிச்சு ஆட்சியர் அலுவலகம் முன்னாடி போராட்டம் நடத்துறாங்க. உடனே போலீஸ் துப்பாக்கி சூடு நடத்துது. அதுல இரண்டு தலித் இளைஞர்கள் பலியாகுறாங்க. துப்பாக்கிச் சூட்டுல…

கக்கன், எம்ஜியார், ஜெயலலிதா நடத்திய படுகொலைகளை படமாக எடுப்பார்களா?

1965 மொழிப்போர் .மத்திய அரசு கொண்டு வந்த ஆட்சி மொழி சட்ட மசோதாவை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டம் எழுந்தது . மாணவர்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 100 க்கும் மேற்பட்டவர் கொல்லப்பட்டனர். அப்பொழுது முதல்வர் பக்தவச்சலம். சுட்டுக் கொல்ல ஆணையிட்ட போலிஸ் மந்திரி திரு கக்கன் (இந்த போராட்டத்தை மையப்படுத்தி கக்கன் வேடத்தில் தனுஷ் நடித்து மாரி செல்வராஜும் படம் எடுக்கப் போவதில்லை.. உதயநிதியும் எடுக்கப் போவதில்லை). இறந்தவர்கள் எல்லா சாதியினரும் உண்டு. இது…

திமுகவுககு எதிரில் இருப்பது அதிமுக அல்ல ஆர்எஸ்எஸ் நச்சு!

“திமுக – அதிமுக என்னும் இருகட்சி அரசியலுக்குள் சிக்கிக் கொள்வதா? அவர்கள் இருவருக்கும் பெரிய வேறுபாடுகளில்லை. ஒருவர் நேரடி அடிமை – இன்னொருவர் மறைமுக அடிமை. திமுகவுக்கு இவ்வளவு ஆதரவு தேவையா? திமுகவுக்கு ஆதரவான அலை என்றெல்லாம் சொல்ல வேண்டுமா?” என்பன போன்ற சிலரின் கருத்து சரியா? இத்தகைய கருத்துகளுக்கான பதில்தான் இது… முதலில் இதை இரு கட்சி அரசியல் என்று புரிந்துகொள்வதனாலும், திமுகவுக்கு எதிராக இருப்பது அதிமுக என்பதாக புரிந்து கொண்டிருப்பதனாலும் எழும் குழப்பமே இது.…

2.நீதிக்கட்சி அரசின் சாதனைகளும் பூசல்களும்! – திராவிட இயக்க வரலாறு!

பார்ப்பனரல்லாதோர் மத்தியில் நீதிக்கட்சி பிரபலமானால் பார்ப்பனர்கள் எப்படி பார்த்துக் கொண்டிரு?கக முடியும்? நீதிக்கட்சியின் வளர்ச்சி மட்டும் பார்ப்பனர்களை பதற்றப்படுத்தவில்லை. மாண்டேகு செம்ஸ்போர்டு கமிஷன் அறிக்கையும் அவர்களை பாடாய் படுத்தியது. ஆம், இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்டு இந்தியர்களும் ஆட்சி நடத்தும் வகையில் டொமினியன் சர்க்கார் எனப்படும் இரட்டை ஆட்சிமுறையை அமல்படுத்த அந்த அறிக்கை வகை செய்தது. முதல் உலகப்போரில் பிரிட்டனுக்கு இந்திய ராணுவ வீரர்கள் ஒத்துழைப்பு அளித்தால் சுயாட்சி உரிமை குறிதது பரிசீலிக்கப்படும் என்று பிரிட்டன் வக்குறுதி…