நிலவில் இறங்கிய சோவியத் விண்கலம் (பிப்ரவரி 03, 1966) – History of space exploration
முதன் முறையாக நிலவில் விண்கலத்தை பத்திரமாக தரையிறக்கும் முயற்சியில் சோவியத் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றனர். 1966ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி லூனா-9 விண்கலம் குறைந்த வேகத்தில் பயணம் செய்து நிலவின் மேற்பரப்பில் பத்திரமாக இறங்கியது. தரையிறங்கியவுடன் அந்த விண்கலம் தன்னைச் சுற்றிய நிலவின் தரைப் பகுதியை படம் பிடிக்கத் தொடங்கியது. முதன் முறையாக நிலவின் தரையில் விண்கலம் இறங்கி அதன் அமைப்பை படம் பிடித்து அனுப்பியது. ரெய்னர், மேரியஸ் என்ற இரு பள்ளத்தாக்குகள்…