Browsing: பா.ரஞ்சித்

கலைஞர்னா துள்ளுறதும் ஜெயலலிதான்னா பம்முறதும்தான் வீரமா?

90-களின் பிற்பகுதில காஞ்சிபுரத்துல உள்ள தலித் மக்கள், அங்க பிற சாதி ஆட்களால் பயன்படுத்தபட்டு வந்த பஞ்சமி நிலங்களை மீட்கிறதுக்காக போராட்டம் நடத்துறாங்க. போராட்டத்தின் ஒரு பகுதியா நாலரை ஏக்கர் நிலத்தை மீட்டு, அங்க விவசாயம் செய்ய ஆரம்பிக்கிறாங்க தலித் மக்கள். ஆட்சியாளர்கள் உடனே, அந்த மக்களை அடிச்சு விரட்டுறாங்க. இதைக் கண்டிச்சு ஆட்சியர் அலுவலகம் முன்னாடி போராட்டம் நடத்துறாங்க. உடனே போலீஸ் துப்பாக்கி சூடு நடத்துது. அதுல இரண்டு தலித் இளைஞர்கள் பலியாகுறாங்க. துப்பாக்கிச் சூட்டுல…

கக்கன், எம்ஜியார், ஜெயலலிதா நடத்திய படுகொலைகளை படமாக எடுப்பார்களா?

1965 மொழிப்போர் .மத்திய அரசு கொண்டு வந்த ஆட்சி மொழி சட்ட மசோதாவை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டம் எழுந்தது . மாணவர்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 100 க்கும் மேற்பட்டவர் கொல்லப்பட்டனர். அப்பொழுது முதல்வர் பக்தவச்சலம். சுட்டுக் கொல்ல ஆணையிட்ட போலிஸ் மந்திரி திரு கக்கன் (இந்த போராட்டத்தை மையப்படுத்தி கக்கன் வேடத்தில் தனுஷ் நடித்து மாரி செல்வராஜும் படம் எடுக்கப் போவதில்லை.. உதயநிதியும் எடுக்கப் போவதில்லை). இறந்தவர்கள் எல்லா சாதியினரும் உண்டு. இது…

பிபிசியின் 2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண்களில் கானா இசைவாணி! – BBC 100 Women 2020 – Casteless Collective

பா.ரஞ்சித்தின் கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் என்ற இசைக்குழுவில் இடம்பெற்ற கானா இசைவாணி 2020 ஆம் ஆண்டுக்கான, பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார். ஆண்டுதோறும் பார்ப்பனர்கள் கர்நாடக சங்கீதம் என்ற பெயரில் இசையைத் தங்களுக்கானதாக மாற்றி, டிசம்பரில் சென்னை சபாக்களில் சொந்தம் கொண்டாடி வந்தார்கள். இப்படிப்பட்ட சூழலில் சென்னைக்கே சொந்தமான கானாப் பாடல்களை பாடும் பாடகர்களைக் கொண்டு, கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் என்ற பெயரில் ஒரு இசைக்குழுவை இயக்குனர் பா.ரஞ்சித் அமைத்தார். அந்தக் குழுவில் இருந்த ஆண்களுக்கு மத்தியில்…