Browsing: பிச்சுவையர் பவுன் வாங்கியது – கல்கியின் சிறுகதைகள்- 6

பிச்சுவையர் பவுன் வாங்கியது – கல்கியின் சிறுகதைகள்- 6

பாபவிநாசம், பிராணதார்த்திஹர அய்யர் குமாரர், பிச்சுவையரின் அகடவிகட சாமர்த்தியங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. அவருடைய சாமர்த்தியங்கள் அவருக்கே நன்றாய்த் தெரிந்தவை. தம்மை ஏமாற்றக் கூடியவன் இந்த ஜம்புத்வீபத்தில் ஒருவரும் கிடையாது என்று சொல்லிக் கொள்வார். அவருடைய கிராமாத்தாருக்கும் அவ ருடைய வல்லமைகளில் பூரண நம்பிக்கையுண்டு. “பா.பி. பிச்சுவை யரா? அவர் ஏமாந்தால் எமன் ஏமாந்த மாதிரி!’ என்று அவர்கள் பேசிக் கொள்வார்கள். ஆனால் பிச்சுவையரின் சாமார்த்தியங்களில் நம்பிக்கையில்லாத ஒரே ஒரு ஆத்மா உண்டு. அது அவருடைய தர்ம…