Browsing: பினராயி விஜயன்

இந்தியாவின் எதிர்பார்ப்பு மையம் ஸ்டாலின் – உதயமுகம் கவர் ஸ்டோரி

யாருமே எதிர்பாராத இடத்திலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மிகப்பெரிய கவுரவம் கிடைத் திருக்கிறது. இதுவரை யாருக்குமே கிடைக்காதது அந்த கவுரவம். ஏன், கலைஞருக்கே கிடைக்காதது அந்தக் கவுரவம். ஆம், இரண்டாம் உலகப்போரில் பாசிஸ்ட்டுகளை ஒழித்துக் கட்டிய சோவியத் அதிபர் ஸ்டாலினைப் போல, இந்தியாவை அச்சுறுத்தும் ஆர்எஸ்எஸ் பாசிசத்துக்கு முடிவுகட்ட மு.க.ஸ்டாலினை முன்மொழிந்திருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. எதிரெதிர் துருவங்களாக இருக்கும் அகில இந்தியக் கட்சிகளை ஒருங்கிணைத்து, 2024 மக்களவை தேர்தலில் பாசிச பாஜகவை வீழ்த்த ஸ்டாலினை தேர்வு செய்திருக்கிறது…

தோழர் ஆர்யா தனி நபர் அல்ல. அதுவே பெரும் நம்பிக்கை! – மாதவராஜ்

“இன்னும் டிகிரி கூட படித்து முடிக்கவில்லை. அதற்குள் திருவனந்தபுர மேயரா? “ என்று ஆச்சரியப்படுவதை, பெருமைப்படுவதை, நம்பிக்கை கொள்வதையும் பார்க்க முடிகிறது. அதுபோல “இந்த சின்ன வயதுக்கு பொருந்தாத பெரிய பணி” என அவநம்பிக்கை கொள்வதை, கம்யூனிஸ்ட்களின் மீதான வெறுப்பில், “இது ஒரு அரசியல் ஸ்டண்ட்” என பொருமுவதையும் பார்க்க முடிகிறது. கம்யூனிஸ்டுகளை நெருக்கமாய் பார்த்து அறிந்தவர்களுக்கும், கம்யூனிஸ்டு கட்சி கடைப்பிடிக்கும் நெறிமுறைகளை தெரிந்தவர்களுக்கும் சந்தேகமோ, அவநம்பிக்கையோ வரவே வராது. கொண்டாடவேச் செய்வார்கள். தந்தை எலக்டிரிசியன், தாய்…

தமிழகம் வட மாநிலத்தவரின் வேட்டைக்காடாக வேண்டுமா? ஒரே ஒரு உதாரணம்!

கேரள முதல்வர் திரு.பினராயி விஜயன் எவ்வளவோ கேட்டும் பிரதமர் மோடி கொடுக்காமல் அதானிக்கு விற்ற திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வாகனங்கள் நிறுத்தும் கட்டணத்தை அதிகரித்துள்ளனர்.. அதிகமாக அல்ல..! முப்பது நிமிடத்திற்கு பிறகு ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஏழு ரூபாய் அதிகரித்துக் கொண்டிருக்கும்.. உதாரணமாக மூன்று மணி நேரம் விமானம் வர தாமதித்தால் 1237 ரூபாய் மட்டுமே…. அரசாங்க சொத்தை விற்றதன் விளைவு… எந்த முகத்துடன் இவர்கள் வாக்கு கேட்கிறார்கள்.. எனத்தெரியவில்லை..! மேலே சொன்னது அனைத்தும் உண்மை… *மீண்டும் அதிமுக…