Browsing: புதுமைப்பித்தன் கதைகள்

கோபாலய்யங்காரின் மனைவி – புதுமைப்பித்தன் சிறுகதைகள் – 3

(பாரதியார் தமது சந்திரிகை என்ற நாவலிலே, கோபால அய்யங்காருக்கும், வீரேசலிங்கம் பந்துலு வீட்டுப் பணிப் பெண்ணாகிய மீனாட்சிக்கும் பிரம்ம சமாஜத்தில் நடந்த கலப்பு மணத்தை வருணித்திருக்கிறார். கதையின் போக்கு ‘கண்டதும் காதல்’ என்ற கோபால அய்யங்காரின் இலட்சியத்துடன் – ஏன் பிரமை என்றும் கூறலாம் – முடிவடைகிறது. முடிவு பெறாத இரண்டாவது பாகத்தில் வருணிப்பாரோ, என்னவோ? மனிதன், ‘காதல் பெண்ணின் கடைக்கண் பணியிலே’ அனலை விழுங்கலாம், புளித்த குழம்பையும் குழைந்த சோற்றையும் உண்ணச் சம்மதிப்பானோ என்னவோ? பின்…

கதை இலக்கியம் – 1 – இது மிஷின் யுகம்! – புதுமைப்பித்தன்

நான், அன்று ஒரு முழு நீளம் பெயர்கொண்ட-ஹோட்டல்காரர்£களுக்கும் நாடகக்காரர்களுக்குந்தான் வாயில் நுழையாத பெயர் வைக்க நன்றாகத் தெரியுமே- ஹோட்டலுக்குச் சென்றேன். உள்ளே எப்பொழுதும்போல் அமளி; கிளாஸ், ப்ளேட் மோதும் சப்தங்கள், அதைக் கொண்டுவா, இதைக்கொண்டுவா! என்ற அதிகாரங்கள்; இடையிலே உல்லாச சம்பாஷைனை; சிரிப்பு. போய் உட்கார்ந்தேன். “ஸார், என்ன வேண்டும்?” “என்ன இருக்கிறது?” என்று ஏதோ யோசனையில் கேட்டு விட்டேன். அவ்வளவுதான் கடல்மடை திறந்ததுபோல் பக்ஷணப் பெயர்கள் செவித் தொளைகளைத் தகர்த்தன. “சரி, சரி, ஒரு ப்ளேட்…