Browsing: புயல்

புயல், மழை பாதிப்பு- சென்னையில் மத்திய குழு ஆய்வு

புயல் மழையால் பாதிக்கப்பட்ட சென்னையில் வேளச்சேரி, பள்ளிக்கரணை, காசிமேடு உள்ளிட்ட இடங்களில் மத்திய குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்துவருகின்றனர். நிவர் புயல் மற்றும் மழையால் ஏற்பட்ட சேதங்களை கணக்கிட மத்திய அரசு, உள்துறை இணைச் செயலாளர் அசுதோஷ் அக்னிகோத்ரி தலைமையில் குழு ஒன்றை தமிழகத்திற்கு அனுப்பியது. 7 அதிகாரிகள் இடம்பெற்று அந்த குழு, சென்னைக்கு வந்து 2 பிரிவுகளாக பிரிந்து தமிழகத்தில் புயல், மழையால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டு வருகின்றனர். அதன்படி, வேளச்சேரி ராம்நகர், பள்ளிக்கரணை…

புயல் மழையில் இருந்து பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகள் வெளியீடு

பலத்த காற்று, கனமழையின்போது முன்னெச்சரிக்கையாக பயிர்களை விவசாயிகள் எப்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் பேடி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டிசம்பர் 2, 3 மற்றும் 4-ஆம் தேதிகளில் தென்மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளது. எனவே சம்பா நெல் பயிர் சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் தங்களுடைய பயிர்களை அருகில் உள்ள பொது சேவை மையங்களிலோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ அல்லது வங்கிகளிலோ உரிய காப்பீட்டுக் கட்டணத்தைச்…

மதுரை வரை புயலின் தாக்கம் இருக்கும்- அமைச்சர் தகவல்

வங்கக்கடலில் உருவாகும் புதிய புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வங்கக்கடலில் உருவாகும் புதிய புயலை சமாளிக்க தேவையான நடிவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும். ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மீனவர்கள் கரை திரும்ப கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.” என்றார். மேலும், “நிவர் புயல் சேதங்களை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று…