Browsing: புரெவி புயல்

தமிழகத்தில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்

‘புரெவி’ புயல்லால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெய்துவரும் கனமழை இன்றும் நாளையும் தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள, புரெவி புயலால் தமிழத்தில் கன மழை பெய்து வருகின்றது. இந்த புயல் மன்னார் வளைகுடா அருகே வந்தபோது, வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது. இதனால், காற்றின் வேகம் குறைந்து டெல்டா மாவட்டங்களிலும், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் கனமழை பெய்யத் தொடங்கியது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில்…

புரெவி புயல்- 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை

புரெவி புயலால் தென் மாவட்டங்களில் கனமழை பெய்துவருவதால், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்று தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த “புரெவி புயல்” 3-ஆம் தேதி, மன்னார் வளைகுடா பகுதியில், பாம்பனுக்கு அருகில் நிலைகொண்டுள்ளது. இந்தப்புயல், 4-ஆம் தேதி அதிகாலையில் பாம்பன் – கன்னியாகுமரிக்கு இடையே, தென்தமிழக கடற்கரையை கடக்கக் கூடும் என்று…

புரெவி புயல்- தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு

புரெவி புயல் காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதேபோல, கேரளா மாநிலத்தின் திருவனந்தபுரம், கொல்லம், பதனம்திட்டா, ஆலப்புழா ஆகிய மாவட்டங்களிலும கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்த புயல் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு மையத்திலிருந்து, 26 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 17 மீட்பு குழுக்களும்,…

புரெவி புயலால் தூத்துக்குடி விமான சேவை ரத்து

வங்கக்கடலில் உருவாகி இருக்கும் புரெவி புயல் காரணமாக தூத்துக்குடியில் இருந்து இயக்கப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி உள்ளிட்ட தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனால் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு புதன் கிழமை பிற்பகல் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், பயணிகளின் சிரமத்தை தவிர்ப்பதற்காக தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு காலை நேரத்தில் கூடுதலாக ஒரு விமானம் இயக்கப்பட்டது. அதில் பயணிகள் மாற்றி அனுப்பப்பட்டனர். இன்று…

புரெவி புயல்- மக்களுக்கு முதலமைச்சரின் வேண்டுகோள்

புரெவி புயலை சமாளிக்க போர்க்கால அடிப்படையில் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், அது குறித்து பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்எச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவும், அமைச்சர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் ஆகியோரின் சீரிய கண்காணிப்பு மற்றும் அறிவுரைகள், கள நிலவரங்களை உடனுக்குடன் அறிந்து அதற்கு ஏற்ப வழங்கப்பட்ட குறிப்பான அறிவுரைகள் மற்றும் மாவட்டங்களில் எடுக்கப்பட்ட சிறப்பான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக ‘நிவர்’ புயலினால் ஏற்பட…