பெரியார் திடலில் ஒரு பெரியார் தொண்டரின் அனுபவம்!
ஜூலை 8. எனது வாழ்நாளில் மறக்க முடியாத நாள். 1998 ஆம் ஆண்டு இந்த நாளில் தான் பெரியார் திடலுக்கு பணியாளராக வந்தேன். 23ஆண்டுகள் உருண்டோடி விட்டன… 43 ஆண்டுகளில் 23 ஆண்டுகள் திடலில் கடந்துள்ளேன். ஆசிரியரின் சுற்றுப்பயணத்தில் உதவிக்கு செல்லும் தோழர்களில் ஒருவனாக பயணிக்க வேண்டும் என்ற ஆசையில் சில நாட்கள் பணியாற்ற அன்றைய துணை பொதுச்செயலாளர் சாமிதுரை அவர்களிடம் தோழர் சா.பகுத்தறிவாளன் வழியாக அணுகினேன். அவர் அப்போது அதற்கு வாய்ப்பில்லை என்றும், திடலில் வேறு…