Browsing: மனிதகுல வரலாறு – இரு போட்டி நகரங்கள்

மனிதகுல வரலாறு – இரு போட்டி நகரங்கள்

புராதன கிரேக்கத்தில் தலைநகரம் என்று எதுவுமில்லை. ஆனால், இரண்டு நகரங்கள் நாடுகளைப் போல இயங்கி வந்தன. அவை இரண்டும் தங்களில் யாருக்கு அதிக முக்கியத்துவம் என்று போட்டியிட்டன. அதிகாரத்திலும் செல்வத்திலும் வெற்றிகரமாக முன்னணி பெறுவதில் அவை முனைப்பாக இருந்தன. ஏதென்ஸும் ஸ்பார்ட்டாவும்தான் இந்த போட்டியில் ஈடுபட்டிருந்தன. கி.மு.700 வாக்கில், ஏதென்ஸும் ஸ்பார்ட்டாவும் சக்தி வாய்ந்த மன்னர்களால் ஆளப்பட்டன. இந்த மன்னர்கள் படிப்படியாக வியாபாரிகளிடமும், உயர்குடியினரிடமும் அதிகாரத்தை இழந்தனர். கீழ்நிலையில் உள்ள வர்க்கத்தினருக்கு எவ்வித உரிமையும் அதிகாரமும் இல்லை.…