மனிதகுல வரலாறு – எட்ரூஸ்கன் அரசர்கள்
கி.மு.620ல் எட்ரூஸ்கன் என்ற வம்சத்தினரால் ரோம் கைப்பற்றப்பட்டது. வடக்கு இத்தாலியின் பெரும்பகுதியை ஆட்சி செய்த எட்ரூஸ்கன் வம்சத்தினர் ரோமில் அரசர்களை நியமித்தனர். இந்த அரசர்கள் “டார்குயின்ஸ்” என்று அழைக்கப்பட்ட செல்வந்த குடும்பத்தை சேர்ந்தவர்களாவர். எட்ரூஸ்கன் வம்சத்தினர் கிட்டத்தட்ட 111 ஆண்டுகள் ரோமாபுரியை ஆட்சி செய்தனர். இந்த காலகட்டத்தில் இத்தாலியின், செல்வச் செழிப்பு மிக்க நகரங்களுள் ஒன்றாக ரோமாபுரியை கட்டமைத்தனர். செங்கல்லை எவ்வாறு உபயோகிப்பது, மேற்கூரையில் எப்படி கல் வேலைப்பாடுகள் செய்வது, எவ்வாறு சாலைகளை வரையறுப்பது மற்றும் வடிவமைப்பது,…