Browsing: மரங்கள் பாதுகாப்பு

மரம் இல்லையேல் பூமியே இல்லை!

என் பெயர் சிப்கோ தொப்பென்று மரக்கிளையிலிருந்து குதித்த சிறுமி திரும்பிப் பார்க்காமல் ஓடத் தொடங்கினாள். ஓடும்போதே அவளுக்குத் தோன்றியது. புலியோ சிறுத்தையோ நெருங்கி வரும்போதுகூட இப்படி ஓடியதில்லை நான். என்னைவிடவும் பெரிய பாம்பு என் காலை உரசியபடி ஊர்ந்து சென்றபோதுகூட இவ்வளவு நடுங்கியதில்லை நான். அச்சமல்ல, அச்சத்தின் நிழலைக்கூட இதுவரை இந்தக் காட்டில் நான் உணர்ந்ததில்லை. ஆனால், இந்த அந்நிய மனிதர்களை மட்டும் தொலைவில் காணும்போதே ஏன் நொறுங்கிவிடும் அளவுக்கு இதயம் இவ்வளவு வலிக்க வேண்டும்? தோட்டத்திலும்…