Browsing: மோடி

இந்திய ஏரிக்கு குறுக்கே பாலம் கட்டும் சீனா – பிரதமர் மோடி என்ன சொல்லப் போகிறார்?

இந்திய பகுதியான லடாக்கில் உள்ள பாங்காங் திசோ ஏரியின் குறுக்கே சீனா புதிய பாலம் ஒன்றை கட்டி வருகிறது. இந்த பாலத்தின் மூலம் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிக்கு சீனா தனது படைகளை விரைவாக கொண்டு வந்து சேர்க்க முடியும். இந்தியா, சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லைப் பிரச்சனை தீவிரமடைந்துள்ளது. கடந்த 2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலைத் தொடர்ந்து, கிழக்கு லடாக்கில் டெப்சாங் சமவெளியில் இருந்து வடக்கேயும், தெற்கே டெம்சோக் பகுதியிலும் இரு தரப்பிலும்…

ஆர்எஸ்எஸ் எதற்காக உருவாக்கப்பட்டது? – Vinayaga Murugan

மதியம் பொழுதுபோகாமல் ‘ஹேராம்’ படத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். எத்தனையோமுறை பார்த்திருந்தாலும் இந்தமுறை பார்க்கும்போது இதுவரை தவறவிட்ட ஒரு விஷயம் புரிந்தது. கதைப்படி கமலஹாசனும், ஷாருக்கானும் தொல்லியல் துறையில் பணிபுரிபவர்கள். படத்தின் முதல்காட்சியே அவர்கள் இருவரும் ஹரப்பா, மொஹஞ்சதாரோ பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்வதாக தொடங்கும். பிறகு ஒரு வசனம் வரும். ஷாருக்கான் சொல்வார்… “ஐயாயிரம் வருஷம் முன்னாடி வாழ்ந்த சிவிலைசேஷன். பசங்க பொம்மை வச்சு விளையாடணும்ன்னு நினைச்ச சிவிலைசேஷன். நம்மளை மாதிரி பெரியவங்க சாமியை வச்சு விளையாடணும்ன்னு நினைக்காத…

தமிழகம் வட மாநிலத்தவரின் வேட்டைக்காடாக வேண்டுமா? ஒரே ஒரு உதாரணம்!

கேரள முதல்வர் திரு.பினராயி விஜயன் எவ்வளவோ கேட்டும் பிரதமர் மோடி கொடுக்காமல் அதானிக்கு விற்ற திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வாகனங்கள் நிறுத்தும் கட்டணத்தை அதிகரித்துள்ளனர்.. அதிகமாக அல்ல..! முப்பது நிமிடத்திற்கு பிறகு ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஏழு ரூபாய் அதிகரித்துக் கொண்டிருக்கும்.. உதாரணமாக மூன்று மணி நேரம் விமானம் வர தாமதித்தால் 1237 ரூபாய் மட்டுமே…. அரசாங்க சொத்தை விற்றதன் விளைவு… எந்த முகத்துடன் இவர்கள் வாக்கு கேட்கிறார்கள்.. எனத்தெரியவில்லை..! மேலே சொன்னது அனைத்தும் உண்மை… *மீண்டும் அதிமுக…

தலித் வாக்காளர்களை குறைக்க எல்லையை விட்டுக்கொடுக்கும் ஆதனூர் ஊராட்சி!

பக்கத்து நாடுகளுடன் பிரச்சனையை சுமுகமா தீர்க்க மனசில்லாம எப்போ பார்த்தாலும் சண்டை போட்டுக்கிட்டு, ராணுவத்துக்கு செலவு செஞ்சுக்கிட்டு இருக்கு இந்தியா. பாகிஸ்தான்கிட்ட ஒரு மாதிரியும், சீனாகிட்ட ஒருமாதிரியும் இந்திய அரசு அணுகுது… அருணாச்சல பிரதேசத்திற்குள் சீனா ஆக்கிரமிப்பை கண்டுக்காம விடுது இந்திய அரசு… ஆனால், பாகிஸ்தான் கிட்ட வம்புச்சண்டை இழுக்குறதும், பாகிஸ்தானை காரணம் காட்டி ஜம்மு காஷ்மீரை கூறுபோடுறதுமா இந்திய அரசு ஏட்டிக்குப் போட்டியா நடந்துக்குது… நாடுகள் இடையே இப்படி என்றால் தேசபக்தி பொங்குது. ஆனால், நாட்டுக்குள்…

மின்சார சட்டத்திருத்தத்தை நிறுத்தி வைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

வரைவு மின்சார சட்டத்திருத்த மசோதாவை நிறுத்தி வைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் முதல்வர் கூறுகையில், மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மின்சார சட்டத்திருத்த மசோதாவில் இருக்கும் புதிய திருத்தங்கள் மாநில கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகவும், மாநில அரசுகளின் அதிகாரங்களில் தலையிடுவதாகவும் உள்ளது. கொரோனா தடுப்புப் பணிகளில் நாட்டில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் கவனம் செலுத்துவதால், மத்திய அரசு அனுப்பியிருக்கும் சட்டத்திருத்த மசோதா மீது அலோசிக்க அவகாசம் தேவை.…

ஈகோ பார்க்காமல் ஏழைகளின் வயிற்றுக்கு உதவுமா மோடி அரசு?

முன்னாள் நிதிமைச்சர் ப. சிதம்பரம் சொல்லி இருக்கும் கருத்து முக்கியமானது. வறுமை கோட்டிற்கு கீழே இருக்கும் குடும்பங்களுக்கு, தலா ரூ.5,000 கொடுத்தால், ரூ. 65,000 கோடிகள் செலவாகும். அதை தரவேண்டும் என்கிறார். அது 13 கோடி குடும்பங்களுக்கு போகலாம். சராசரியாக 3 (அ) 4 பேர்கள் இருக்கும் ஒரு குடும்பம் என்று வைத்து கொண்டால், இந்த ரூ.5,000, 39 – 52 கோடி வயிறுகளை காப்பாற்றும். அது மொத்த இந்திய மக்கள்தொகையில் சற்றேறக் குறைய 30-35%. இதையே…

பிரதமரின் விவகாரத்தில் நான் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும். இதை வைத்து நான் ஏன் அரசியல் செய்ய வேண்டும் – மம்தா பானர்ஜி

பிரதமர் மோடி ஏற்கனவே 2 முறை டிவி.யில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். கடந்த மாதம் 22ம் தேதி மக்கள் சுய ஊரடங்கு பின்பற்ற வலியுறுத்தினார். அதற்கு 2 நாட்கள் கழித்து 24ம் தேதி 2வது முறை உரையாற்றும் போது, 21 நாட்கள் ஊரடங்கு அமல் படுத்துவதாக அறிவித்தார். இந்நிலையில், நேற்று காலை 9 மணிக்கு வீடியோ ஒன்றை சமூக இணையதளத்தில் அவர் வெளியிட்டார். அதில் அவர் 11 நிமிடங்கள் உரையாற்றினார். உரையில் அவர் கூறியதாவது: முடக்க காலத்தில்…