Browsing: 101 இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்

பாபா கடக்சிங் (ஜுன் 10, 1868 – அக்டோபர் 6, 1963)-freedom fighters

பாபா கடக்கிங் ஒரு மாபெரும் சுதந்திர போராட்ட வீரர் ஆவார். விடுதலை போராட்டத்தில் பங்கேற்றமைக்காக 15 முறை அவர் சிறையில் அடைக்கப்பட்டார். தனது வாழ்நாளில் 20 ஆண்டுகாலம் அவர் சிறையில் கழித்தார். தற்போது பாகிஸ் தானில் மேற்குபகுதியில் அமைந்துள்ள சியால்கோட் நகரில் 1868ஆம் ஆண்டு கடக்சிங் பிறந்தார். சியால்கோட்டில் இன்டர் மீடியட் தேர்வில் வெற்றி பெற்ற அவர், மேல் படிப்புக்காக லாகூர் வந்தார். லாகூரில் 1889ல் தனது பி.ஏ. பட்டப்படிப்பை முடித்தார். அங்கிருந்து அவர் சட்டபடிப்பு பயிலும்…

டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் (ஏப்ரல் 14, 1893-டிசம்பர் 6, 1956) – freedom fighters

டாக்டர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கார், இந்தியாவில் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தைச் சேர்ந்த மக்களின் ஈடு இணையற்ற தலைவர் ஆவார். இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டத் தை வரையறை செய்வதில் அவர் மிக முக்கிய பங்கு வகித்தார். ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் மேம் பாட்டுக்காக தனது வாழ்க்கையை முற்றிலும் அர்ப்பணித்தார். 1893 ஏப்ரல் 14ம் தேதி மத்திய பிரதேசத்தில் மகர் எனும் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த குடும்பத்தில் பிறந்தார் அம்பேத்கார். அவரது அளப்பரிய அறிவுக்கூர்மையால் கவரப் பட்…

அஸ்பக்குல்லா கான் (அக்டோபர் 22, 1900 – டிசம்பர் 19,1927)-freedom fighters

நாட்டின் விடுதலைக்காக தனது இன்னுயிரை தியாகம் செய்த மகத்தான தியாகிகளில் ஒருவர் அஸ்பக்குல்லா கான். உத்திரப்பிரதேச மாநிலம் ஷாஜகான் பூர் மாநிலம் 19 நூற்றாண்டின் பிற்பகுதியில் அவர் பிறந்தார். அவரது தந்தை பெயர் சதிகுல்லா கான். 1922ல் அஸ்பக்குல்லா கான் புரட்சியாளர்களின் குழுவில் இணைந்தார். பிரிட்டிஷாரின் நுகத்தடியிலிருந்து இந்தியாவை விடுதலை செய்யும் தீர்மானத்தோடு இவர்கள் போராடினர். ஒரு ஒழுக்கநெறி மிகுந்த வீரனாக, கக்கோரி எனுமிடத்தில் பிரிட்டிஷ் ரயிலில் கொள்ளையடிக்கும் போராட்டத்தை திட்டமிட்ட புரட்சியாளர்களோடு தன்னை இணைத்துக் கொண்டான்…

அருணா ஆசப் அலி (1909-1996)

அருணா ஆசப் அலி 1909ல் வங்கத்தில் பிறந்தார். காந்தியின் சத்தியாகிரகம் மற்றும் ஒத்துழையாமை இயக்கத்தில் அவர் தீவிரமாக பங்கேற்றார். தனது அரசியல் வாழ்வில் அருணா ஆசப் அலி பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார். அருணா ஆசப் அலி ஒரு சிறந்த பேச்சாளர். தனது ஆவேச பேச்சுக்கலால், இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ்சார் வெளியேர வேண்டும் என்று மக்களை முழக்கமிடச் செய்தார். பிரிட்டிஷ் ஆட்சிக்கு முடிவுகட்டவேண்டும் என்று பொதுகூட்டங்களில் அவர் கர்ஜனை செய்தார். 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக…

அன்னிபெசன்ட் (1847-1933) freedom fighters

அயர்லாந்து நாட்டுப்பெண்மணியான அன்னிபெசன்ட் 1893ல் சமூக சீர்திருத்த பணிகளுக்காக இந்தியா வந்தார். இந்தியாவின் மத பாரம்பரியங்கள் குறித்து மிகவும் ஆச்சரியம் கொண்ட அவர் மதரீதியான துறையிலும் பணியாற்ற வேண்டும் என்று விரும்பினார். தியாசபிகல் செஸைட்டி என்று அழைக்கப்படும் இறையியல் கழகத்தின்மூலம் இந்தியாவின் சமூக நலன்களுக்காக மிகச்சிறந்த பணியினை ஆற்றினார். இந்தியாவில் உயர்கல்வியில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டுவர அவர் முயற்சித்தார். மத்திய இந்து பள்ளி மற்றும் கல்லூரியை அவர் நிறுவினார். பிற்காலத்தில் அதுதான் பனாரஸ் இந்து பல்கலைக்கழகமாக அது…