Browsing: 1967) – History of space exploration

வெள்ளிக் கோளில் அமெரிக்க விண்கலம் (அக்டோபர் 19,1967) – History of space exploration

வெள்ளிக் கோளுக்குள் சோவியத் விண்கலம் தரையிறங்கிய மறுநாள், அமெரிக்க விண்கலமான மெரைனர்-5 விண்கலம் வெள்ளிக் கோளை நெருங்கியது. வெள்ளிக் கோளிலிருந்து 3 ஆயிரத்து 990 கிலோ மீட்டர் தொலைவில் அந்த விண்கலம் கடந்து சென்றது. அந்த சமயத்தில் அது அனுப்பிய தகவல்கள் மிகவும் முக்கியமானவை. 3 நிமிடங்கள் பூமியுடன் அது தொடர்பு கொண்டிருந்தது. அதன்பின் வெள்ளிக் கோளின் மறுபக்கம் விண்கலம் சென்று விட்டது. அதன்பிறகு 23 நிமிடங்கள் கழித்து மீண்டும் தகவல்களை அனுப்பியது. வெள்ளிக் கோளை கடந்து…

வெள்ளிக் கோளில் சோவியத் விண்கலம் (அக்டோபர் 18, 1967) – History of space exploration

நிலா பயணத்தில் தேக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சோவியத் விஞ்ஞானிகளின் பார்வை வெள்ளிக் கோளின் பக்கம் திரும்பியது. வெள்ளிக் கோளை ஆய்வு செய்யும் முயற்சி ஏற்கெனவே தொடங்கிவிட்டது. ஆனால் தூரத்திலிருந்து மட்டுமே அந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. வெள்ளிக் கோளின் நிஜத் தன்மை யாருக்கும் தெரியாது. அந்த கோளை அடர்த்தியான மேகம் சூழ்ந்திருந்தால் அதன் உண்மையான அமைப்பு தெரியாமல் இருந்தது. வெள்ளிக் கோளின் ரகசியத்தை அறிய அதில் விண்கலத்தை இறக்குவது என சோவியத் யூனியன் முடிவு செய்தது. வெனேரா-4 என்ற…

முதல் பிரிட்டிஷ் செயற்கைக் கோள் (மே 05, 1967) – History of space exploration

விண்வெளி ஆராய்ச்சி போட்டியில் பிரிட்டனும் தன்பங்கிற்கு ஈடுபடத் தொடங்கியது. முதன்முறையாக முழுக்க முழுக்க பிரிட்டனில் உருவாக்கப்பட்ட ஏரியல்-3 என்ற செயற்கைக் கோள் 1967ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கு முன் பிரிட்டன் சார்பில் வெறும் நிதியுதவியைப் பெற்றுக் கொண்டு ஏரியல்-1, ஏரியல்-2 என்ற இரு செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட்டன. அந்த இரண்டு செயற்கைக் கோள்களும் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டவை. ஆனால், ஏரியல்-3 செயற்கைக் கோள் பிரிட்டிஷ் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது. இருந்தாலும் செயற்கைக்…

விண்கலம் வெடித்து சோவியத் வீரர் பலி (ஏப்ரல் 24, 1967) – History of space exploration

அமெரிக்க விண்கலம் புறப்படுவதற்கு முன் 3 வீரர்களை பலிகொண்ட சம்பவம் முடிந்து 3 மாதங்கள்கூட முடியவில்லை. சோவியத் யூனியனின் பங்குக்கு ஒரு விண்கலம் வெடித்து விண்வெளி வீரர் ஒருவரை பலி வாங்கியது. விளாடிமிர் கோமரோவ். 40 வயதான விண்வெளி வீரர் சோயுஸ்-1 விண்கலத்தில் விண்வெளிக்கு சென்றிருந்தார். மிகவும் அனுபவம் வாய்ந்த விண்வெளி வீரர் இவர். இரண்டாவது முறையாக சோயுஸ்-1 விண்கலத்தில் பயணம் மேற்கொண்டிருந்தார். விண்வெளியில் தனது ஆராய்ச்சிகளை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு பூமிக்குத் திரும்பினார். ஆனால், பூமியின்…

அப்பலோ-1 தீப்பிடித்து 3 வீரர்கள் பலி (ஜனவரி 27, 1967) – History of space exploration

அப்பலோ விண்கலத் திட்டத்தின்கீழ் முதல் விண்கலம் 3 விண்வெளி வீரர்களுடன் தனது பயணத்தை தொடங்க தயாராகியது. அந்த விண்கலத்தில் கஸ் கிரிஸம், எட்வர்டு ஒயிட், ரோஜட் சாஃபே ஆகிய 3 விண்வெளி வீரர்கள் இருந்தனர். ஆனால், விண்கலம் புறப்படுவதற்கு முன் தீப்பிடித்து வினாடிகளில் மூவரும் உயிரிழந்தனர். ஏவுதளத்தில் விஞ்ஞானி களின் கண் முன் இந்த விபத்து நிகழ்ந்தது. விண்வெளி வீரர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இருந்த பகுதியில் முதலில் மின்கசிவு ஏற்பட்ட தாக கருதப்பட்டது. உடனடியாக ஆக்ஸிஜன்…